Home அரசியல் ரேஷன் கடையில் இளம் பெண்ணிடம் சில்மிஷம்: கடை ஊழியர் கைது – Kumudam

ரேஷன் கடையில் இளம் பெண்ணிடம் சில்மிஷம்: கடை ஊழியர் கைது – Kumudam

0



சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண் ஒருவர் மாதவரம் ராஜாஜி தெருவில் உள்ள நியாய விலைக் கடையில் நேற்று பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கடை ஊழியர் இளம்பெண்ணை கைரேகை வைக்குமாறு கூறியதன் பேரில் அவரும் கைரேகை வைத்துள்ளார். அப்போது கைரேகை வேலை செய்யவில்லை என கூறிய ரேஷன் கடை ஊழியர் இளம்பெண்ணை கிட்ட அழைத்து அங்குள்ள பயோ மெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை மற்றும் கருவிழியை பதிவு செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

உடனே இளம்பெண்ணும் அருகே சென்று ரேஷன் கடை ஊழியர் கூறியது போல் செய்து கொண்டிருந்த போது திடீரென ரேஷன் கடை ஊழியர் இளம்பெண்ணிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனே பயந்துபோன இளம்பெண் கடையில் இருந்த வெளியே ஓடிவந்து தனது கணவருடன் தகவல் தெரிவித்துள்ளார்.

மனைவி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் உடனே ரேஷன் கடைக்கு ஓடிவந்து கடை ஊழியரை பிடித்து தர்ம அடிக்கொடுத்து மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை அடுத்த நன்மங்கலம் கோவில் பதாகை பகுதியை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் நல்லதம்பி (56) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version