Home அரசியல் மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் ஐடி ரெய்டு : ரூ 2 கோடி பண பட்டுவாடா...

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் ஐடி ரெய்டு : ரூ 2 கோடி பண பட்டுவாடா ஆவணங்கள் பறிமுதல்  – Kumudam

0



மயிலாப்பூர் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ வேலு, பாஜக சார்பில் தமிழிசை சவுந்தர்ராஜன், தவெக சார்பில் வெங்கட்ராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் திமுக வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றது. 

மேலும், தேர்தல் பண பட்டுவாடாவிற்காக ரூபாய் 9 கோடி அளவில், சத்தியமூர்த்தி பணம் மறைத்து வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் பறக்கும் படையினர் மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலு-வின் உறவினர் சத்தியமூர்த்தி என்பவரின் வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினர். அதில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தை எண்ணும் பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டனர்.

அதில் ரூ.79 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்,  ரூபாய் 2 கோடி வரை பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மயிலாப்பூர் தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி சத்தியமூர்த்தி வீட்டில் நேரடி விசாரணையில் நடத்தினார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version