Home அரசியல் மல்லிகை பூ கையில் சுற்றி கொண்டு வாக்களித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  – Kumudam

மல்லிகை பூ கையில் சுற்றி கொண்டு வாக்களித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  – Kumudam

0



தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி சீமான் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி வரை விட இந்த முறை கூடுதலாக வாக்குகள் பதிவாகி உள்ளன. 

மல்லிகை பூ கையில் சுற்றி வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி சார்பில் இயக்குநர் சுந்தர்.சி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

இன்றைய தினம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஓட்டுப் பதிவிற்கு முன் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது  கோயிலில் கொடுத்த பூவை கையில் சுற்றிக் கொண்டு வாக்குசாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்தார். இதை அங்கு இருந்த வாக்காளர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். மீனாட்சி அன்னையின் ஆசீர்வாதத்துடன் வாக்களிக்க வந்ததாக பழனிவேல் தியாகராஜன் நிருபர்களிடம் விளக்கம் அளித்தார். 

வாக்கு போட முடியாமல் திணறிய திண்டுக்கல் சீனிவாசன் 

திண்டுக்கல் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார்.  இவரை எதிர்த்து திமுக சார்பில் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் இந்த இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

இன்று திண்டுக்கல் தொகுதியில் தனது வாக்களிக்க திண்டுக்கல் சீனிவாசன் சென்றார். அப்போது தான் வாக்களிக்கப்போகும் கட்சியின் சின்னத்திற்கு நேராக உள்ள பட்டனை அழுத்தாமல், அருகில் இருக்கும் சிகப்பு லைட்டை அழுத்திவிட்டு வாக்கு விழவில்லை என தேர்தல் அலுவலர்களிடம் திண்டுக்கல் சீனிவாசன்  கூறினார். பின்னர் பெண் அலுவலர் ஒருவர் சென்று சரியான பட்டனை காட்டினார். அதன் பின்னர்  திண்டுக்கல் சீனிவாசன் பட்டனை அழுத்தி தனது வாக்கினை பதிவு செய்தார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version