Home அரசியல் மே4 வாக்கு எண்ணிக்கை : 232 வேட்பாளர்களுடன் விஜய் நாளை ஆலோசனை – Kumudam

மே4 வாக்கு எண்ணிக்கை : 232 வேட்பாளர்களுடன் விஜய் நாளை ஆலோசனை – Kumudam

0



2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.. அந்த வகையில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை விஜய் அறிவித்தார்.. அதன்படி தமிழ்நாட்டின் முக்கிய தொகுதியான எடப்பாடி தொகுதிக்கு அருண்குமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. அவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதனால் எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளரை தவெக வேட்பாளராக விஜய் அறிவித்தார். ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் முடிவடைந்த நிலையில் மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவியது.. 

இந்த தேர்தலில் தவெகவின் தாக்கம் திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தவெக வாங்கியுள்ள வாக்குகள் யாருடைய வெற்றி பாதிக்கும் என நீண்ட விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில், திருசெந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று நேற்றைய தினம் விஜய் சாமி தரிசனம் செய்தார்.

இதை தொடர்ந்து இன்றைய தினம் விஜய் சீரடி கொண்டு சாய்பாபா கோயிலில் வழிபாடு நடத்தி இருக்கிறார். இந்நிலையில் நாளை 232 தொகுதிகளில் தவெக வேட்பாளர்களை சென்னையில் விஜய் சந்தித்து பேச உள்ளார். மாலை 1.20 மணியளவில் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் வேட்பாளர்களை சந்திக்க உள்ளார். வேட்பாளர்கள் யாரையும் உடன் அழைத்து வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தவெக பூத் ஏஜெண்ட்கள் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக பனையூர் தவெக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version