Home அரசியல் தவெக-விற்கு தாவ தயாராகும் திமுக EX MLA-க்கள்?: அறிவாலயம் அதிர்ச்சி  – Kumudam

தவெக-விற்கு தாவ தயாராகும் திமுக EX MLA-க்கள்?: அறிவாலயம் அதிர்ச்சி  – Kumudam

0



நடந்து முடிந்த  தமிழக சட்டமன்ற தேர்தலில், அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கயல்விழி உள்ளிட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள் பலருக்கும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் பலரும் திமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அமைச்சர் மனோ தங்கராஜ் தவெக செல்வதற்காக ஆதவ் அர்ஜூனாவுடன் பேசியிருப்பதாக சொல்லப்படுகிறது. 

தி.நகர் தொகுதி எம்எல்ஏ கருணாநிதி தனக்கு மீண்டும் சீட் வழங்காத காரணத்தால், தனது மகள் மோனிஷாவை, தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்துக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வைத்தார். இதே போன்று திருவெற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர், இந்த மா.கம்யூ கட்சிக்கு இந்த தொகுதிக்கு சென்றதால், தனது மனவருத்தத்தை தலைமையிடம் சொல்லிவிட்டார். 

இதே போன்று வில்லிவாக்கம் தொகுதியில் அன்பழகன் பேரன் வெற்றியழகன், இந்த முறை தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனாவிற்கு மறைமுக ஆதரவை தெரிவித்துவிட்டார். மேலும், அம்பத்துார் எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டி, நாமக்கல் பெ.ராமலிங்கம், லால்குடியில் தொடர்ந்து மூன்று முறை வென்ற சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட பலரும், தங்களுக்கு மீண்டும் ‘சீட்’ கிடைக்காத திமுக தலைமை மீது கடும் விரக்தியில் உள்ளனர்.

இதே போல,  தி.மு.க.,வில் பேரூர், நகர, ஒன்றிய செயலராக இருக்கும் பலரும், இம்முறை எம்.எல்.ஏ., சீட்டை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தங்களது சீட் வழங்கவில்லை என்பதால் ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். மே 4-ம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு கட்சி தாவ முடிவெடுத்துள்ளனர். இதற்காக தவெக இரண்டாம் கட்ட தலைவர்களுடன் திமுக அதிருப்தி நிர்வாகிகள் பேசி வருகின்றனர். 

இந்த தகவல் முதல்வர் ஸ்டாலின் தெரிய வர , ‘அதிருப்தியில் உள்ளவர்களை உடனே பேசி சமாதானப்படுத்த’ அமைச்சர்கள் உட்பட மாவட்ட செயலாலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version