back to top
19.1 C
London
Saturday, September 19, 2026
No menu items!
Homeதமிழ்நாடு“ஸ்டூடண்ட் மட்டுமல்ல இனி டீச்சர்” செல்போன் கொண்டு  வர தடை.! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...

“ஸ்டூடண்ட் மட்டுமல்ல இனி டீச்சர்” செல்போன் கொண்டு  வர தடை.! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு ! – Kumudam

Date:

Related stories

“அது யாரையும் குறிவைச்சு சொன்னது இல்ல!” – விஜய் குறித்த கருத்து.. VJS  விளக்கம்!

கடந்த வாரம் தனது பேச்சால் எழுந்த சர்ச்சைக்கு விஜய் சேதுபதி,...

இடைத்தேர்தல் களம்: விஜய்க்கு செக் வைக்கும் தோழர்கள்… வெல்லப்போவது யார்? – Kumudam

இடைத்தேர்தல் களம்: விஜய்க்கு செக் வைக்கும் தோழர்கள்... வெல்லப்போவது யார்?...

மீம்ஸ், ரீல்ஸ்களில் கலக்கும் ‘அடியே காந்தா..!’ நாலு ஜெனரேஷன் கடந்தும் டிரெண்டிங்!

72 ஆண்டுகளைக் கடந்தும் எம்.ஆர்.ராதாவின் நடிப்பும், ‘அடியே காந்தா’ வசனமும்...
spot_imgspot_img



இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மார்ச் 2026 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை தவறாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், நிலையான பறக்கும் படையினர், அறைக் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து வகை தேர்வு மையப் பணியாளர்களும், ஒவ்வொரு தேர்வு நாளன்றும் தனது செல்போன்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்துவிட்டு, இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் உறுதிமொழி சான்றினை பூர்த்தி செய்து முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒவ்வொரு அறையிலும் அறைக் கண்காணிப்பாளர்கள் வினாத்தாள்களை தேர்வர்களுக்கு வழங்கிய பின் மீதமுள்ள வினாத்தாள்களை அதே உறையினுள்ளிட்டு Cellotape கொண்டு Seal செய்து முதன்மைக் கண்காணிப்பாளர் துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். வினாத்தான் மீதம் எதுமில்லாத உறைகளையும் முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இவ்வாறு பெறப்பட்ட அனைத்து உறைகளையும் கட்டாகக் கட்டி மீதமுள்ள வினாத்தாள்களுடன் வழித்தட அலுவலரிடம் தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.

விடைத்தாள் சேகரிப்பு மையங்களின் தொடர்பு அலுவலர்கள் இவ்வாறு பெறப்படும் வினாத்தாள் உறைகளிலிருந்து வினாத்தாள்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெற்று உறைகளை தனிக் கட்டுகளாகக் கட்டி அனைத்து தேர்வுகள் முடிவடைந்தவுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here