back to top
17.6 C
London
Wednesday, June 17, 2026
No menu items!
Homeஅரசியல்சிறிய கட்சி, பெரிய கட்சி என இல்லாமல் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களின் குரலுக்கும் மதிப்பளிக்கப்படும்: முதல்வர்...

சிறிய கட்சி, பெரிய கட்சி என இல்லாமல் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களின் குரலுக்கும் மதிப்பளிக்கப்படும்: முதல்வர் விஜய் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வுக்கு பிறகு சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது: “மக்களின் எதிர்பார்ப்புகளை பேரவைக்கு கொண்டு வந்து அதனை செயல்படுத்துவதற்காக திட்டங்களை சட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு இந்த பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள் அதிக நன்மைகளை பெற்றுள்ளார்கள் என்ற வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இங்கே அனைவரும் சமம்.

சிறிய கட்சி பெரிய கட்சி என இல்லாமல் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களின் குரலுக்கும் சட்டமன்றத்தில் மதிப்பளிக்கப்படும்,ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிகள் இடம்பெற்றிருப்பவர்களின் கருத்துகளுக்கும், தவெக உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் சமமாக மதிப்பளிக்கப்பட்டு, நன்மைகள் ஏற்கப்பட்டு ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் இந்தப் பேரவை செயல்படும். அதற்குறிய வகையில் வரலாற்று சிறப்புமிக்க இந்த பேரவையை வழிநடத்தும் பன்பை பெற்ற தலைவரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பார்கள். பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் உறுப்பினர்களின் கண்ணியத்தையும் காக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” என்ற வள்ளுவரின் குரலுக்கு ஏற்ப, சட்டப்பேரவை நடவடிக்கைகள் சீராக, செம்மையாக அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டப்பேரவை ஜனநாயக பண்புகள், ஜனநாயக நெறிகள் பேணிப் பாதுகாப்பதில் பேரவைத் தலைவரும் துணைத் தலைவரும் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” இவ்வாறு அவர் பேசினார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here