back to top
17.2 C
London
Wednesday, June 17, 2026
No menu items!
Homeசினிமாரஜினி 173-வது திரைப்படம்  'தி அவுட்பிட் ஹாலிவுட் திரைப்பட ரீமேக் - Kumudam

ரஜினி 173-வது திரைப்படம்  ‘தி அவுட்பிட் ஹாலிவுட் திரைப்பட ரீமேக் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



ரஜினியின் 173 ஆவது படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 6ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. அப்போது இந்த படத்தை சுந்தர் சி இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சில அரசியல் காரணங்களுக்காக சுந்தர்.சி இந்த படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் பரவின. ஆனால் உண்மையில் அவரது கதை ரஜினிக்கு பிடிக்க காரணத்தால் தான் விலகியதாக தெரிகிறது. ரஜினியின் 173 ஆவது படத்தின் இயக்குநர் யார் என்பது எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தை இயக்கி சிபி சக்ரவரத்தி, ரஜினியின் புதிய படத்தை இயக்கு உள்ளார் என்ற போஸ்டரை படதயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. 

இந்த திரைப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெய்லர் வேடத்தில் ரஜினி நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது. சிறிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும் நடிக்க இருக்கிறாராம். ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய பட போஸ்டரில் கத்திரிகோல், ஊசி, துணி நூல், பட்டன் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது ரஜினி நடிக்கும் டெய்லர் கதாபாத்திரத்தை குறிக்கும் வகையில் உள்ளது. 

ரஜினியின் புதிய படம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹாலிவுட் படமான ‘தி அவுட்பிட்’ படத்தின் தழுவலாக ரஜினியின் 173வது படம் உருவாக உள்ளது. 1970 காலக்கட்டங்களில் நடைபெற்ற கதைக்களத்தை பின்னணியாக கொண்ட இந்த திரைப்படத்தில், ஹீரோ டெய்லர் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அந்த டெய்லர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். அவருக்கு ஏற்றார் போல கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  இந்த புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here