Home அரசியல் நேற்று ஸ்டாலின், வைகோ இன்று அதிமுக, காங், விசிக தலைவர்களுடன் விஜய் சந்திப்பு  – Kumudam

நேற்று ஸ்டாலின், வைகோ இன்று அதிமுக, காங், விசிக தலைவர்களுடன் விஜய் சந்திப்பு  – Kumudam

0



அரசியல் தலைவர்களைச் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெறுகிறார். அந்த வகையில், முதலில் சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றார். அவரை அலுவலக வாயில் முன்பு வந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். அதனை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொகிதீனிடம் வாழ்த்து பெற்றார்.

ஐயூஎம்எல் தலைவர் பேசியதாவது,முதல்வர் விஜய் நாகரிக அரசியல் செய்கிறார். முந்தைய அரசும் நாகரிக அரசியலை செய்தது.பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் புழங்கும் இடத்தின் அருகே உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது நல்ல நடவடிக்கை என்று அவர் பாராட்டினார். ஆளுநர் நிகழ்வில் வந்தே மாதரம் பாடுவது இயல்புதான் என்றும் அவர் கூறினார்.

இதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்றார். அவரை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். அங்கு முன்னாள் முதல்வர் காமராஜர் படத்திற்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.

இதன் பின்னர் பட்டினபாக்கத்தில் சென்ற அவர் அதிமுகவின் ஒருதரப்பான சிவி சண்முகம் மற்றும் வேலுமணி உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து விலகி, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான சுமார் 30 எம்.எல்.ஏ-க்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால் அதிமுகவின் பொதுச்செயலாளரான இபிஎஸ்ஸை இன்னும் சந்திக்கவில்லை.

இதையடுத்து வேளச்சேரியில் உள்ள விசிக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் சென்றார். அங்கு வாசலில் காத்திருந்து திருமாவளவன் விஜயை வரவேற்று அலுவலகம் அழைத்து சென்றனர். அவருடன் விசிக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version