Home சினிமா Rewind: “டைரக்ஷனை ஒரு கை பார்ப்பேன்”- நடிகை ஷாலினி (பாகம் 1) – Kumudam

Rewind: “டைரக்ஷனை ஒரு கை பார்ப்பேன்”- நடிகை ஷாலினி (பாகம் 1) – Kumudam

0



 “டைரக்ஷனை ஒரு கை பார்ப்பேன்”

  – நடிகை ஷாலினி

நேத்துதான் கல்யாணம் ஆன மாதிரி இருக்கு. அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப்போயிடுச்சி.. தனது சமீபத்திய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டியபடி பேச ஆரம்பிக்கிறார், ஷாலினி. திருமணத்திற்குப் பிறகு அவர் தந்த இந்த முதல் பேட்டியில்தான் எத்தனை எக்ஸ்ப்ரஷன்ஸ்!

“ஹவ் இஸ் லைஃப்?

“கல்யாணத்துக்கு முந்தி மாதிரியே எனக்கு எல்லாம் இருக்கு. நினைச்சவுடனே அப்பா அம்மாவைப் பாக்கமுடியது. வழக்கம்போல தங்கையைக் கூட்டிக்கிட்டு ஃப்ரெண்ட்ஸ்கூட சினிமா போகமுடியுது. இதுபோக இப்ப என்னோட பி.பி.ஏ படிப்பைத் தொடர ஆரம்பிச்சிருக்கேன். போன வருஷம் மே மாதத்துல பரிட்சை எழுத வேண்டியது. கல்யாணம், ஹனிமூன்னு பிஸியா இருந்ததால தள்ளிப்போட்ட படிப்பு இது. இந்த மாசம் பரிட்சை எழுதுறேன். அதனால திருமண வாழ்க்கையில வித்தியாசமா எதையும் என்னால உணரமுடியலை.

அவரோட ஆபீஸுக் கெல்லாம் நான் அவ்வளவா போறது கிடையாது. ஷூட்டிங்குக்கு அவர்கூட போவேன். டிரெஸ், மேக்கப் பத்தி என்னோட உண்மையான அபிப்பிராயத்தைச் சொல்வேன். சிலசமயம் கேட்டுக்குவார். சிலசமயம் எங்களுக்குள் விவாதம் நடக்கும். 

‘அலைபாயுதே’, ‘பிரியாத வரம் வேண்டும் விமரிசனங்கள்ல தனியா உங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டாத பத்திரிகைகளே இல்லை. நல்ல நடிகையை இழந்துட்டதா எல்லாரும் வருத்தப்படுறாங்க… அதைப் பத்தி உங்களுக்கு என்ன தோணிச்சி… அஜித் என்ன சொன்னார்?

“ரொம்பப் பெருமையாத்தான் இருக்கு. ஒருவேளை இப்படியெல்லாம் பேசாம விட்டாங்கன்னாதான் வருத்தமா இருந்திருக்கும். ஏன்னா, எவ்வளவோ பேர் நடிக்க வர்றாங்க. நல்ல நடிகைங்கிற பேர் வாங்குறது கஷ்டம். நான் நடிச்சேன். பேர் வாங்குனேன். கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டேன். மத்தபடி, அஜித் என்ன நினைக்கிறார்ங்கிறதைப் பத்தி நீங்க அவர்கிட்டதான் கேக்கணும்.”

எதிர்காலத்துல, மறுபடியும் நடிக்க வருவீங்களா?

“நடிக்கிறது பத்தின்னு இல்ல, நிறைய விஷயங்கள்ல இப்படி நடக்கணும்னு நாம நினைச்சி, அது அப்படி நடக்கலைன்னா வருத்தப்படுவோம். இந்த நிமிஷத்துல நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு இதுதான் வேணும்.

கல்யாணம் பண்ணிட்டோம்ங்கிறதுக்காக என்னோட குடும்பத்தை நான் இழக்கலை. நினைச்ச நேரத்துல அம்மா, அப்பாவோட, அண்ணன், தங்கச்சியோட இருக்க முடியுது. இந்த வாய்ப்பு நிறைய பேருக்குக் கிடைக்காது. இதை நான் பரிபூர்ணமா உணர்ந்திருக்கேன். அதனால எதிர்காலத்துல நடிக்கிறது அல்லது இல்லைங்கிறது பத்தி இப்ப யோசிக்கிறதில்லை. அது அந்த நேரத்துல நாம எடுக்கிற முடிவு.”

தொடரும்…

 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version