back to top
19 C
London
Tuesday, June 16, 2026
No menu items!
Homeஉலகம்விண்வெளியில் எலான் மஸ்க் உருவாக்கும் பிரம்மாண்ட டேட்டா சென்டர் : சிப்கள் உருகிவிடும் என விஞ்ஞானிகள்...

விண்வெளியில் எலான் மஸ்க் உருவாக்கும் பிரம்மாண்ட டேட்டா சென்டர் : சிப்கள் உருகிவிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



விண்வெளியில் சுமார் 10 லட்சம் செயற்கை கோள்களை நிலைநிறுத்தி, ஒரு மாபெரும் நெட்வொர்க்கை உருவாக்க  எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளார். பூமியைப்போல இரவு நேரம் அல்லது மேகமூட்டம் போன்ற தடைகள் விண்வெளியில் இல்லை என்பதால், அங்கு 24 மணிநேரமும் தடையற்ற சூரியசக்தியை பெற முடியும். மேலும், பூமியில் சர்வர்களை குளிர்விக்க அதிக நீர் மற்றும் மின்சாரம் தேவைப்படுகிறது.

ஆனால், விண்வெளியின் இயற்கையான குளிர்ச்சியான சூழல் இதற்கு உதவும் என மஸ்க் நினைக்கிறார். விண்வெளியில் உள்ள இந்த டேட்டா சென்டர்கள் பூமிக்கு தகவல்களை அனுப்ப ரேடியோ அலைகளுக்கு பதிலாக லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும், இந்த தொழில்நுட்பம், பூமியில் உள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைவிட அதிவேகமான இணைய இணைப்பை வழங்கும் எனவும் நம்புகிறார்.

எலன் மஸ்க் ஏற்கனவே ‘Colossus’ என்ற உலகின் மிகப்பெரிய AI சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளார். இதன் அடுத்த கட்டமே, விண்வெளி டேட்டா சென்டர். இந்த திட்டத்திற்கு, தனது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படும் எனவும் மஸ்க் அறிவித்துள்ளார். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான டேட்டா சென்டர் செயற்கை கோள்களை விண்வெளிக்கு கொண்டு செல்லவும், அவற்றை பராமரிக்கவும் இந்த ராக்கெட்கள் உதவும்.இந்த திட்டம் பிரம்மாண்டமாக தெரிந்தாலும், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சில முக்கிய சவால்களை முன்வைக்கின்றனர். விண்வெளி குளிர்ச்சியாக இருந்தாலும், வெற்றிடத்தில் கணினி சிப்கள் வெளியிடும் வெப்பத்தை வெளியேற்றுவது மிகவும் கடினம்.

இதனால் சிப்கள் உருகும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விண்வெளியில் உள்ள காஸ்மிக் கதிர்கள் நுட்பமான மின்னணு பாகங்களை மிக விரைவாக சிதைத்துவிடும். ஏற்கனவே பூமியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் கழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், 10 லட்சம் செயற்கை கோள்கள் என்பது விண்வெளி விபத்துகளுக்கு வழிவகுக்கும் எனவும் மஸ்கிற்கு விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். 

ஒரு சிப் பழுதடைந்தால்கூட, அதை விண்வெளிக்கு சென்று மாற்றுவது என்பது மிகவும் செலவுமிக்க மற்றும் கடினமான காரியம். விண்வெளியில் இவ்வளவு பெரிய நெட்வொர்க்கை அமைக்க சர்வதேச விண்வெளி சட்டங்கள் அனுமதிக்காது என்றும், இந்த செயற்கைக்கோள்கள் நட்சத்திரங்களின் ஒளியை தடுக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here