Home அரசியல் முதல்வர் விஜய்க்கு ஆலோசனைகளை வழங்கினேன் : ஸ்டாலின் எக்ஸ் தளபதிவு – Kumudam

முதல்வர் விஜய்க்கு ஆலோசனைகளை வழங்கினேன் : ஸ்டாலின் எக்ஸ் தளபதிவு – Kumudam

0



தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தமிழக முதலமைச்சராக விஜய் நேற்றைய தினம் பொறுப்பேற்று கொண்டனர். இன்றைய தினம் பெரம்பூர் எம்எல்ஏவாக பொறுப்பேற்ற விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை தினம் சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜேசிடி பிரபாகர் சபாநாயகருக்கும், துணை சபாநாயகராக ரவிசங்கர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இதன் பின்னர் மதியம் 2 மணியளவில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினை முதல்வர் விஜய் அவரது சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது உதயநிதி விஜயை கட்டியணைத்து வரவேற்றார். இந்த சந்திப்பு குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதில்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன். என குறிப்பிட்டுள்ளார். 

அன்புமணி, சீமான் சந்திப்பு 

இதன் பின்னர் அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் விஜய் சந்தித்தார். மாலையில் பாமக தலைவர் அன்புமணியை பனையூர் இல்லதிலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை நீலாங்கரை இல்லத்திலும் விஜய் சந்திக்க உள்ளார். அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதால் எடப்பாடியுடனான சந்திப்பை விஜய் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version