Home அரசியல் நாளை சபாநாயகர் தேர்தல்: ஜேசிடி பிரபாகர் போட்டியிடுகிறார் – Kumudam

நாளை சபாநாயகர் தேர்தல்: ஜேசிடி பிரபாகர் போட்டியிடுகிறார் – Kumudam

0



தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக பெருபான்மை இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக ஸ்டாலின் நேற்றைய தினம் பதவியேற்று கொண்டார். இன்றைய தினம் எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. 

தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை முதல்வர் விஜய் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் சபாநாயகர், துணை சபாநாயகருக்கான தேர்தல் நாளைய தினம் நடைபெற உள்ளது. இதில் தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் போட்டியிட வைக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ஜேசிடி பிரபாகருக்கு அதிமுக உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும் என்பதால் இந்த முயற்சியில் தவெக இறங்கி உள்ளது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version