back to top
19 C
London
Tuesday, June 16, 2026
No menu items!
Homeஅரசியல்தமிழக எம்எல்ஏக்கள் 126 பேர் கிரிமனல் வழக்கு: தவெக இதிலும் முதலிடம்  - Kumudam

தமிழக எம்எல்ஏக்கள் 126 பேர் கிரிமனல் வழக்கு: தவெக இதிலும் முதலிடம்  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பு ஆகியவை 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 234 வேட்பாளர்களில் 233 பேரின் சுயவிவரப் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில், தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் டி. அருண்குமாரின் பிரமாணப் பத்திரம், இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெளிவாக இல்லாத காரணத்தால் ஆய்வு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாணப் பத்திரத்தில், 233 எம்எல்ஏக்களில் 126 எம்.எல்.ஏ.க்கள் அதாவது 54 சதவீத பேர் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கொலை, கடத்தல் போன்ற கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக 56 எம்.எல்.ஏ.க்கள் அதாவது 24% பேர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஒரு எம்.எல்.ஏ. தன் மீது கொலை வழக்கு இருப்பதாகவும், 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மீது கொலை முயற்சி வழக்கு இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பட்டியலில், அதிகபட்சமாக தவெக எம்.எல்.ஏ.க்கள் 107 பேரில் 41 அதாவது 38% பேர் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் 5-இல் 3  அதாவது 60%  பேர், திமுக 59-இல் 37  அதாவது 63% பேர், அதிமுக 47-இல் 33 அதாவது 70% பேர், பாமக 4-இல் 4 100% பேர் மீதும் குற்ற வழக்குகள் இருக்கின்றன.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here