back to top
20 C
London
Sunday, September 20, 2026
No menu items!
Homeதமிழ்நாடுதமிழகத்தில் பெட்ரோல்,டீசல் விலை திடீர் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி - Kumudam

தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் விலை திடீர் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி – Kumudam

Date:

Related stories

"புதிய தலைமைச் செயலகம் அவசியம்" – மாணிக்கம் தாகூர் விளக்கம் !

விஜய் தலைமையிலான கூட்டணி, பிரதமர் வேட்பாளர் சர்ச்சை, திமுக விமர்சனம்...

வேட்டுவம் தான் ஃபர்ஸ்ட் ! – பா. ரஞ்சித்! ஜெர்மன் தள்ளிப்போனது ஏன் ?

சூர்யாவை வைத்து பா. ரஞ்சித் உருவாக்க நினைத்த ஜெர்மன் படத்தின்...

“அது யாரையும் குறிவைச்சு சொன்னது இல்ல!” – விஜய் குறித்த கருத்து.. VJS  விளக்கம்!

கடந்த வாரம் தனது பேச்சால் எழுந்த சர்ச்சைக்கு விஜய் சேதுபதி,...
spot_imgspot_img



ஈரான் இஸ்ரோல் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை அதிகரிக்கிறது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசலுக்கும் அந்த நிலை வரலாம் என மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் தொடர்பாக பதற்றம் வேண்டாம் என மத்திய அரசு பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் கூறுகையில், ‘அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெயுடன் இயங்கி வருகின்றன. நாட்டில் போதுமான அளவு பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது. எந்தவித தட்டுப்பாடும் இல்லை. நாடு முழுவதும் சில்லறை விற்பனை நிலையங்கள் இயல்பாக இயங்கி வருகின்றன. எனவே வதந்திகளை நம்பி சில பகுதிகளில் மக்கள் அவசரப்பட்டு பெட்ரோல், டீசல் வாங்க வேண்டாம் என தெரிவித்ததுள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் மொத்தம் 7,000 நயாரா பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை நயாரா நிறுவனம் உயர்த்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள நயாரா பங்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ‘நயாரா’(தனியார்) பெட்ரோல் நிறுவனம் திடீரென உயர்த்தியுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.107.93-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.97.22-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடலூரில் நயாரா பெட்ரோல் விலை ரூ.5.30 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.107.93க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.97.22க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here