back to top
19 C
London
Tuesday, June 16, 2026
No menu items!
Homeஉலகம்இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் :  பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டார், ஈரான் அறிவிப்பு? -...

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் :  பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டார், ஈரான் அறிவிப்பு? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டாக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், குவைத் உள்பட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலில் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் பெஞ்சமின் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியவில்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. 

ஈரானில் 555 பேர் பலி

கடந்த 28-ந்தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானில் உள்ள ரெட் கிரசெண்ட் என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள 131 நகரங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொடக்கப் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் சுமார் 150 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

லெபனானில் 149 பேர் உயிரிழப்பு 

லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 149 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில், ஹெஸ்பொல்லா தாக்குதல் மற்றும் இஸ்ரேலிய பதிலடித் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here