Home அரசியல் 4 மணி நிலவரம்: 1 கோடி வாக்குகளை பெற்று தவெக சாதனை  – Kumudam

4 மணி நிலவரம்: 1 கோடி வாக்குகளை பெற்று தவெக சாதனை  – Kumudam

0



தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 62 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்பம் முதலே தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற வந்தது.

இதில் மதியம் 4 மணி வரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் ரூ.1,15,06,918 வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது சந்தித்த முதல் பொதுத்தேர்தலில் 35.89 சதவிகித வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது. அடுத்தப்படியாக திமுக 24.88 சதவிகித்துடன் 79,76,506 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக 21.49 சதவிகித்துடன் 68,90,253 வாக்குகளை பெற்று 3-வது இடத்தில் உள்ளது. 

காங்கிரசு 3.64 சதவிகித்துடன் 11,67,788 வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக 3.11 சதவிகித வாக்குகளுடன் 9,96,285 வாக்குளையும், நாம் தமிழர் கட்சி 3.84 சதவிகித்துடன் 12,30,056 வாக்குகளை பெற்றுள்ளார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version