Home உலகம் ஹார்முஸ் நீரிணை கைப்பற்ற அமெரிக்க அழைப்பு நிராகரிப்பு: அதிபர் டிரம்ப் அப்செட்  – Kumudam

ஹார்முஸ் நீரிணை கைப்பற்ற அமெரிக்க அழைப்பு நிராகரிப்பு: அதிபர் டிரம்ப் அப்செட்  – Kumudam

0



அமெரிக்காவின் அழைப்பை உலக நாடுகள் நிராகரித்தால் அதிபர் டிரம்ப் கடும் அப்செட்டில் இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில்: ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு விவகாரத்தில் எங்களுக்கு உதவ யாரும் தேவையில்லை. நாங்கள் உலகின் வலிமையான தேசம். உலகில் உள்ல நாடுளிலேயே மிகவும் வலிமையான ராணுவத்தை நாங்கள் கொண்டுள்ளோம்.

கூட்டு பாதுகாப்பு என்ற கருத்து இருந்தபோதிலும் நேட்டோ அமைப்பின் உறுப்பினர்கள் உதவவில்லை. ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை பாதுகாப்பதில் உதவுவதற்கு உலக நாடுகள் போதிய ஆர்வம் காட்டவில்லை. வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களால் நான் திடுக்கிட்டு போனேன்.இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டோம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை தாக்கும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டிருக்க கூடாது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஒருபோதும் அணு ஆயுதத்தை பயன்படுத்தாது. ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும். ஆனால் இந்த வாரத்திற்குள் போர் முடிய வாய்ப்பில்லை. ஈரானின் பல்வேறு பகுதிகளில் 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன. 

ஈரான் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதல்களில் 90 சதவீதத்தையும், டிரோன் தாக்குதல்களில் 95 சதவீதத்தையும் நாங்கள் குறைத்து உள்ளோம். ஈரானின் வான் வழித்தடுப்பு சாதனங்கள் முற்றிலுமாக சிதைக்கப்பட்டு விட்டன. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version