Home அரசியல் தமிழகத் தேர்தல் களம்: 101 தொகுதிகளில் தவெக முன்னிலை – விஜய் வீட்டில் போலீஸ் குவிப்பு!...

தமிழகத் தேர்தல் களம்: 101 தொகுதிகளில் தவெக முன்னிலை – விஜய் வீட்டில் போலீஸ் குவிப்பு! – Kumudam

0



தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே பல்வேறு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வலுவான முன்னிலையைப் பெறத் தொடங்கியது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத் தரவுகளின்படி தவெக 57 இடங்களிலும், அதிமுக 48 இடங்களிலும், திமுக 27 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

காலை 10 மணி நேர நிலவரப்படி, கள யதார்த்தத்தில் தவெக 100 இடங்களிலும், அதிமுக 81 இடங்களிலும், திமுக 51 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தமிழக அரசியலில் தவெக ஏற்படுத்தியுள்ள இந்த அதிரடித் திருப்பத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைவர் விஜய் இல்லத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல்துறை பாதுகாப்பு தற்போது கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் காலையில் வெற்றி கொண்டாட்டத்திற்கு தயார் ஆன நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கிய பின்பு, திமுக பின்னடைவை சந்தித்தது. இதனால் தேர்தல் கொண்டாட்டங்கள் களையிழந்து அண்ணா அறிவாலயம் வெறிசோடி காணப்பட்டது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version