Home சினிமா சிம்பு உடன் மோதல் அரசன் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல் ? – Kumudam

சிம்பு உடன் மோதல் அரசன் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல் ? – Kumudam

0



நடிகர் சிலம்பரசன் ‘தக் லைப்’ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் தாதாக்களின் வாழ்க்கை மையமாக கொண்ட  திரைப்படமாக உருவாகி வருகிறது.

இயக்குநர் வெற்றி மாறன் ‘வடசென்னை’ படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகுகிறது.

 சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெற இருக்கிறது.இதனிடையே சிம்பு உடன் விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் படத்தில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் பரவி வந்தன. 

இந்த நிலையில், ‘அரசன்’ படத்தில் இருந்து தான் விலகுவதாக வெளியான தகவலுக்கு விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,

அப்படி ஒண்ணும் கிடையாது. எனக்கே தெரியாது இப்படியான செய்திகள். வதந்திகள் மிக வேகமாக பரவுகின்றன. இதையெல்லாம் நம்பாதீர்கள் என மறுத்துள்ளார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version