Home அரசியல் “அன்று கரெண்ட் கட்- இன்று கஞ்சா” திமுக ஆட்சிக்கு வேட்டு வைத்த போதை பொருள்  –...

“அன்று கரெண்ட் கட்- இன்று கஞ்சா” திமுக ஆட்சிக்கு வேட்டு வைத்த போதை பொருள்  – Kumudam

0



2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் ஹாட்ரிக் வெற்றியை தடுத்து திமுக ஆட்சி அமைந்தது. முதல் முறையாக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று திமுக ஆட்சி தொடரும். 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என ஸ்டாலின் பேசி வந்தார். ஆனால் எதிர்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு திமுக தள்ளாடி வருகிறது. 

தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைக்காது என்ற இந்த தேர்தலிலும் நிரூபணம் ஆகி உள்ளது. 2011ம் ஆண்டு திமுக ஆட்சி இழக்க முக்கிய காரணியாக அமைந்தது கரெண்ட் கட். அன்றைய காலக்கட்டத்தில் பல மணி நேரம் கரெண்ட் கட் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதியது. தற்போது திமுக ஆட்சிக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் முடிவுரை எழுதி உள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பழக்கம் அதிகரித்து, இதன் காரணமாக பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முன்பாக மகளிர் உரிமை முன்பணமாக ரூ.5 ஆயிரம் கொடுத்தது. 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் என திமுகவின் எந்த தேர்தல் வியூகமும் எடுபடவில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கமே திமுக திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version