back to top
15.3 C
London
Saturday, June 6, 2026
No menu items!
Homeதமிழ்நாடுதமிழகத்தில் ரூ.1262 கோடி பணம் பரிசுப்பொருட்கள் பறிமுதல், 5.73 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் தகவல் ...

தமிழகத்தில் ரூ.1262 கோடி பணம் பரிசுப்பொருட்கள் பறிமுதல், 5.73 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் தகவல்  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளரை சந்தித்த அவர் தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் 3.60 லட்சம் பேரும், பாதுகாப்பு பணியில் 83 ஆயிரம் பேரும் ஈடுபட்டுள்ளனர்; 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளன.

14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை 4.18 லட்சம் தபால் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்புள்ள பணம் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் ரொக்க பணம் மட்டும் ரூ.543 கோடி.தமிழகம் முழுவதும் 62 இடங்களில் ஓட்டுகள் எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

தற்போது வரை சி-விஜில் செயலி மூலம் 5634 புகார் வந்துள்ளன. வாக்குச்சாவடிக்குள் செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை, செல்போன்களை வெளியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.85,875 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 5.73 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச் சாவடிகளுக்கு சுமார் 1.06 லட்சம் இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பணியில் 1.47 லட்சம் காவலர்கள் மற்றும் மத்திய ஆயுதப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 24 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டிருக்கும் 5,938 இடங்களில் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் கூடுதலாக பாதுகாப்புப் பணிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here