Home அரசியல் அரசியலில் அடுத்த ட்விஸ்ட்: தவெக ஆதரவு நிலைப்பாடு- அதிமுக எம்எல்ஏக்களுடன்  சி.வி.சண்முகம் தனியே ஆலோசனை  –...

அரசியலில் அடுத்த ட்விஸ்ட்: தவெக ஆதரவு நிலைப்பாடு- அதிமுக எம்எல்ஏக்களுடன்  சி.வி.சண்முகம் தனியே ஆலோசனை  – Kumudam

0



நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எதிர்கட்சி அந்தஸ்தை அதிமுக இழுந்திருக்கிறது. எடப்பாடி தலைமையில் ஏற்கனவே 10 தோல்விகளை சந்தித்த அதிமுக சட்டமன்ற தேர்தலுடன் 11-வது தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனால் அதிமுகவினர் சோர்வடைந்து உள்ளனர். 

இதனால் அதிமுகவில் குழுப்பம் ஏற்பட்டு, சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணி அடிக்கடி கூடி ஆலோசனை நடத்தி வந்தது. இதனிடையே அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை சென்னை திரும்பி எடப்பாடியுடன் ஆலோசனை நடத்தி இருந்தனர். காலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடியுடன் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக தெரிகிறது. 

இதில் 47 எம்எல்ஏக்களில் 42 பேர் மட்டும் கலந்து கொண்டனர். 5 எம்எல்ஏக்கள் எடப்பாடி மிஸ் ஆகி இருந்தனர். இந்த நிலையில் மாலை எம்ஆர்சி நகரில் உள்ள சிவி சண்முகம் இல்லத்தில் எஸ்பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்பட 36 எம்எல்ஏக்கள் தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் தவெகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த ஆலோசனைக்கு பின் தவெக ஆதரவு நிலைப்பாட்டை சிவிசண்முகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தெரிகிறது. இந்நிலையில் அதிருப்தியில் இருக்கும் அதிமுக எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிவி சண்முகம் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். அவர்களுடன் உதயகுமார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version