Home உலகம் அமெரிக்க உலகெங்கிலும் அமைதியைச் சீர்குலைக்கின்றன: வடகொரியா கிம் ஜாங் சாடல்  – Kumudam

அமெரிக்க உலகெங்கிலும் அமைதியைச் சீர்குலைக்கின்றன: வடகொரியா கிம் ஜாங் சாடல்  – Kumudam

0



வட கொரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் கிம் ஜோங் உன்-னின் தொழிலாளர் கட்சி, ஏறக்குறைய முழுமையான ஆதரவுடன், 99.93 சதவிகித வாக்குகளையும் அனைத்து இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அனைவரும் வியக்கும் விதமாக இந்தத் தேர்தலில் 99.99 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 

அதில், அதிபராகவுள்ள கிம் ஜோங் உன்னின் தொழிலாளர் கட்சி 99.93 சதவிகித வாக்குகளையும் முழு ஆதரவையும் பெற்று மீண்டும் அதிபராகத் தேர்வாகவுள்ளதாக வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. அதிபராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அமெரிக்காவை ஒரு பயங்கரவாத நாடு என்று வர்ணித்தார்.

“அமெரிக்காவின் ராணுவக் கொள்கைகளே உலகெங்கிலும் அமைதியைச் சீர்குலைக்கின்றன. தனது இறையாண்மையை பாதுகாப்பதற்காக வட கொரியா ஒருபோதும் அணு ஆயுதங்களைக் கைவிடாது. நாட்டின் பாதுகாப்புக்கு அணுசக்தித் திறன் இன்றியமையாதது”. ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களை விமர்சித்த கிம், ஈரான் உடனான அமெரிக்காவின் போர் தனது நாடு அணு ஆயுதங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபிக்கிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், எதிரி தாக்குதல்களை முறியடிக்கத் தனது இராணுவம் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார். தென் கொரியாவை தனது நாட்டின் மிகப்பெரிய எதிரி என்று வர்ணித்த கிம், அது தனது எல்லைகளை மீறினால் இரக்கமின்றி பதிலடி கொடுக்கப்படும் என கிம் ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version