back to top
21.5 C
London
Monday, September 14, 2026
No menu items!
Homeசினிமாதுணை இயக்குநரிடம் தங்க நகையை ஏமாந்த பிக்பாஸ் பிரபல நடிகை கதறல் - Kumudam

துணை இயக்குநரிடம் தங்க நகையை ஏமாந்த பிக்பாஸ் பிரபல நடிகை கதறல் – Kumudam

Date:

Related stories

விநாயகர் சதுர்த்தியில் வெளியான ராமாயணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல்...

“அவையை எப்படி நடத்தணும்னு எனக்குத் தெரியும்!” – சபாநாயகர் விளாசல் !

சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி....

sardar 2 movie review : கர்ஜிக்கும் ஆக்‌ஷன்… கடுப்பேற்றும் லாஜிக்!

நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? படத்தின்...
spot_imgspot_img



ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகை தாமரை செல்வி  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீருடன் இரண்டு வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு இருக்கிறார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தான் ஒருவருக்கு உதவி செய்த நிலையில் அந்த நபர் தன்னுடைய நகைகளை ஏமாற்றிவிட்டார் என்று அதில் குற்றசாட்டு வைத்திருக்கிறார்.

தாமரை செல்வி பேசும் வீடியோவில், சின்னத்திரை நடிகை ஸ்வேதாவின் கணவர் எனக் கூறிக் கொண்டு வரும் ஆதி என்பவர் மீது பல குற்றச்சாட்டுகளும், புகார்களும் இருக்கிறது. ஆனால் அவர் நான் எந்த தப்பும் செய்யவில்லை என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் சூழ்ச்சிகள் தான் என்றெல்லாம் சொன்னார். நானும் அதை உண்மை என்று நம்பி இருந்தேன்.

சில வாரங்களுக்கு முன்பு எங்கள் வீட்டிலேயே சில நாட்கள் தங்கி இருந்தார். என்னுடைய சொந்த தம்பி போல தான் பார்த்தேன். அதனால் அவருக்கு ஒரு பிரச்சனை என்றதும் என்னுடைய மூன்று பவுன் செயினை கொடுத்து அதை அடகு வைத்து பணத்தை எடுத்துக்கொள்ள சொன்னேன். நாங்கள் வசிக்கும் பக்கத்தில் நகைக்கு குறைவான பணம் கொடுப்பதால் அவர் வசிக்கும் பக்கத்து தெருவில் அடகு வைக்கலாம் என்று சொன்னார்.

நானும் அவர் பெயரில் நம்பிக்கையாக அடகு வைத்தேன். ஆனால் அந்த நகையை இரண்டு நாளில் திருப்பி அதை விற்றிருக்கிறார். என் வீட்டில் இருந்தபடியே இந்த வேலையெல்லாம் செய்திருக்கிறார். இது எனக்கு தெரியாது. என்னுடைய நகையை விற்ற பணத்தில் தான் சில நாட்களுக்கு முன்பு அவர் பல பெண்களுக்கு உதவி செய்வது போல பணம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தாக குற்றசாட்டியுள்ளார். துணை இயக்குனர் ஆதி மீது  காவல் நிலையத்தில் கணவர் பார்த்தசாரதி மூலம் புகார்  கொடுத்து இருக்கிறேன் என்று நடிகை தாமரை செல்வி தெரிவித்துள்ளார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here