Home அரசியல் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கி இருக்கும் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி சந்திப்பு  – Kumudam

புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கி இருக்கும் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி சந்திப்பு  – Kumudam

0



நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எதிர்கட்சி அந்தஸ்தையும் அதிமுக இழந்துள்ளது. தவெக பெருபான்மை கிடைக்காத நிலையில், அதிமுகவில் ஒரு தரப்பினர் விஜய் ஆதரவு அளிக்க எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் தவெக பக்கம் தாவாமல் இருப்பதை தடுக்க எடப்பாடி முயற்சிகளஅ மேற்கொண்டு உள்ளார். 

புதுச்சேரியில் உள்ள தவளக்குப்பத்தில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஓ.எஸ். மணியன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட சுமார் 27 அதிமுக எம்எல்ஏக்கள் அந்த ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தவெகவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் அணி மாறிவிடக் கூடாது என்பதால் இந்த ஏற்பாட்டை அதிமுக தலைமை செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவு கொடுக்குமாறு எடப்பாடி பழனிசாமியை சி.வி. சண்முகம் கடந்த இரு தினங்களாக நிர்பந்தித்து வருவதாக ஒரு தகவல் பரவியது.ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்காததால், சி.வி. சண்முகம் தனு ஆதரவு எம்எல்ஏக்களுடன் நட்சத்திர விடுதியில் தங்கி இருப்பதாக மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இன்று மாலை 4 மணியளவில் சென்னையில் புதுசேரிக்கு எடப்பாடி கிளம்பினார். புதுச்சேரி சென்ற எடப்பாடி அங்கு தனியார் ரிசார்ட்டில் தங்கி உள்ள அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version