back to top
16.6 C
London
Wednesday, September 16, 2026
No menu items!
Homeஅரசியல்நீண்ட இழுபறிக்கு பிறகு விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு ?: தவெகவினர் உற்சாகம்  -...

நீண்ட இழுபறிக்கு பிறகு விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு ?: தவெகவினர் உற்சாகம்  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



108 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் 5 என 113 எம்எல்ஏக்கள் ஆதரவு தவெகவிற்கு உள்ளது. ஆட்சி அமைக்க ஆதரவு கோரி நேற்றைய தினம் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து உரிமை கோரி இருந்தார். ஆனால் விஜயை முதல்வராக பதவியேற்க ஆளுநர்  அழைப்பு விடுக்கவில்லை. இதனால் தவெக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. 

இந்நிலையில், திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க போவதாக தகவல்கள் வெளியானது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் இறுதிகட்டத்தை எட்டி இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதிமுக பதவி ஏற்க வைக்க பாஜக விரும்புவதாகவும், அதற்காகவவும் தவெகவிற்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை எனவும் கூறப்பட்டது. 

இந்நிலையில், 2-வது முறையாக ஆளுநரை சந்திக்க தவெக தலைவர் விஜய் இன்று கிண்டி மக்கள் பவனுக்கு சென்றார். அப்போது அவரது கார் தவிர வேறு கார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆளுநர் சந்திக்க விஜய் நீண்ட நேரம் காத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. சுமார் 30 நிமிடம் காத்திருப்புக்கு பிறகே ஆளுநர் விஜய் சந்திப்பு நடந்தது. 

அப்போது ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு விஜய் ஆளுநரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. ஆட்சி அமைத்தவுடன் பெருபான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் விஜய் ஆளுநரிடம் அப்போது தெரிவித்து உள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தாகவும், அதிகாரப்பூர்வமாக அழைப்பு சற்று நேரத்தில் வெளியாகும் எனவும் மக்கள் பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆளுநருக்கு எதிராக கோஷம் 

“செய்யாதே செய்யாதே அரசியல் செய்யாதே” தளபதிக்கு விரைவில் பதவி பிரமாணம் செய்து வை என திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தவெக நிர்வாகிகள் பதாகைகள் ஏந்தி ஆளுனர் மாளிகை முன்பாக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை 

ஆளுநரை சந்தித்த பின் பட்டினப்பாக்கம் இல்லத்தில் சட்ட நிபுணர்களுடன் விஜய் தீவிர ஆலோசனை. என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ராமன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்பு. ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க தாமத‌மானால் அடுத்து என்ன செய்வது என ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here