Home அரசியல் தவெகவிற்கு ஆதரவு கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்  – Kumudam

தவெகவிற்கு ஆதரவு கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்  – Kumudam

0



நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறவில்லை. ஆட்சியை பறி கொடுத்து எதிர்கட்சியாக திமுக அந்துஸ்து பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 5, சிபிஐ, சிபிஎம், விசிக, ஐஎம்யூஎல் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதில் காங்கிரஸ் ஏற்கனவே தவெக ஆதரித்துவிட்டது. 

தவெக ஆட்சி அமைக்க தேவைப்படும் 6 எம்எல்ஏக்களை திமுக கூட்டணியில் கட்சியிடம் பெற முயற்சித்து வருகிறது. விசிக, சிபிஐ,சிபிஎம் ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரி கடிதம் அளித்துள்ளது. இந்த 3 கட்சிகளும் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உள்ளன. இந்த நிலையில் சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்தனர். 

இந்த சந்திப்பின் போது சட்டமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்தது தொடர்பாக கூட்டணி கட்சிகள் தங்களது வருத்தத்தை இந்த ஆலோசனையின் போது தெரிவித்தனர். மேலும் தவெக ஆதரவு தரக்கோரி கடிதம் அளித்துள்ளது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

மூன்று கட்சிகள் ஆதரவு தரவில்லை என்றால். ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்து பாஜக மறைமுகமாக தமிழகத்தில் ஆட்சி செய்யும். அதற்கு நாம் வழி ஏற்படுத்திவிடக்கூடாது. ஆகவே தவெகவிற்கு ஆதரவு அளியுங்கள். என கூட்டணி கட்சிகள் ஸ்டாலின் அட்வைஸ் செய்து அனுப்பி வைத்து இருக்கிறார். இதனால் விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய 3 கட்சிகளும் நாளை உயர்மட்டக்குழு கூட்டத்தில் தவெகவை ஆதரிப்பது என முடிவெடுக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version