Home சினிமா ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா: ஏப்ரல் 26 மதுரையில் நடக்கிறது – Kumudam

‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா: ஏப்ரல் 26 மதுரையில் நடக்கிறது – Kumudam

0



கருப்பு திரைப்படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். கருப்பு திரைப்படத்தை பண்டிகை நாளில் வெளியிடவே படக்குழு திட்டமிட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனால் இறுதியாக படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முவிவு செய்தது. 

கருப்பு படத்தில் இதுவரை 4 பாடல்கள் வெளியிடப்பட்டு அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாடல்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்  ட்யூட் திரைப்படத்தைப் போல் கருப்பு படத்தில்  சாய் அப்யங்கரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கருப்பு படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்ற நம்பப்படுகிறது 

‘கருப்பு’ படத்தின் முழு ஆல்பமும் ஏப்ரல் 26 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் மதுரையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் யார் சிறப்பு விருந்தினராக வருவார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு’. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கருப்பு திரைப்படம் நாட்டார் தெய்வமான கருப்புசாமியை மையமாக வைத்து உருவாகியுள்ளது என்பதால் இப்படத்தின் இசை வெளியீட்டை மதுரையில் வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக மதுரையில் ஏப்ரல் 26ம் தேதி நடத்த இருக்கிறார்களாம்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version