back to top
13.1 C
London
Saturday, June 6, 2026
No menu items!
Homeஉலகம்ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு  - Kumudam

ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் தனது சொந்த வலைதளப் பக்கமான ட்ரூத்சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “ஈரானிய அரசு கடுமையான பாதிப்பைச் சந்தித்திருப்பதாக தோன்றும் உண்மையின் அடிப்படையிலும், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில், ஈரானிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தை முன்வைக்கும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்திவைக்க எங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்க ராணுவம் முற்றுகையைத் தொடரவும், எல்லா வகையில் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டுள்ளேன். அவர்களுடைய ஒப்பந்தம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிவுக்கு வரும் வரை போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தின. ஈரானும் பதிலுக்கு அதிரடி தாக்குதல் நடத்தியது. அதுமட்டுமின்றி,  ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் தெரிவித்தது. இதனால், இந்தியா, சீனா உள்ளிட்ட அதிகளவிலான மக்கள்தொகை கொண்ட நாடுகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. மேலும், கச்சா எண்ணெய் வரத்து இல்லாததால் எல்பிஜி சிலிண்டர், டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஏப். 8 ஆம் தேதி போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த டிரம்ப், பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த  பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

ஆனாலும் தற்காலிக போர் நிறுத்தத்தை அமெரிக்க அறிவித்து இருந்தது. தற்போதும் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த  பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள மாட்டார் என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

அமைதிப்பேச்சுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளதால், உலக நாடுகளிடையே சற்று ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here