back to top
13.1 C
London
Saturday, June 6, 2026
No menu items!
Homeஉலகம்110 கிலோ போதைப்பொருள் கடத்தல்: 22 புத்தத்துறவிகள் இலங்கை விமானநிலையத்தில் கைது  - Kumudam

110 கிலோ போதைப்பொருள் கடத்தல்: 22 புத்தத்துறவிகள் இலங்கை விமானநிலையத்தில் கைது  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



நான்கு நாள்கள் விடுமுறையை தாய்லாந்தில் கழித்துவிட்டு, இலங்கை திரும்பிய புத்த துறவிகளின் உடைமைகளில், பயிர் வகையிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் இருந்ததை இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், புத்த துறவிகளின் பைகளில் ஒரு மறைப்பு ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் பைகளில் 5 கிலோ வரை பயங்கரமான போதைப்பொருளை வைத்திருந்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும், இலங்கையில் உள்ள புத்த கோயில்களில் இருந்த இளம் துறவிகள் ஆவர். அங்கிருந்த தொழிலதிபர் ஒருவர், இவர்களை மூளைச்சலவை செய்து, தாய்லாந்துக்கு இலவசமாக சுற்றுலா அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.சில துறவிகளோ, சுற்றுலா சென்று வந்தோமே தவிர, இந்த போதைப்பொருள் கடத்தல் பற்றி தங்களுக்குத் தெரியாது என விசாரணையில் கூறியுள்ளதாகவும் தெரிகிறது. 

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.110 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புத்த துறவிகள் பெயரில் போதைப்பொருள் கடத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். குஷ் மற்றும் ஐஸ் என்ற பயங்கர போதைப்பொருள்கள் இதுவென்றும் தெரிய வந்துள்ளது. முதலில், புத்த துறவிகளின் உடைமைகள் மிக அதிகமாக இருந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here