TUJ சார்பில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க மாநில தலைவர் DSR சுபாஷ் மற்றும் நிர்வாகிகள் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களிடம் புகார் மனு வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது., 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள மாவட்ட அளவில் மற்றும் தாலுகா அளவில் உள்ள அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடக பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவுக்கான அனுமதி அடையாள அட்டை வழங்குவதில் குளறுபடி செய்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வழங்குவதில் குளறுபடி செய்த காவல்துறை அதிகாரிகள், மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மே 4ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போதும் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் அனுமதிக்கான அடையாள அட்டை சீரான முறையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள பட்டுள்ளது. மனு பெற்றுக் கொண்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரி., இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க படும் என்று கூறினார். உடன் தேசிய குழு உறுப்பினர்கள் எம்.டி. ராமலிங்கம் , பி.ஜி. பாலகிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர் நா.வினோத் குமார், தென்சென்னை மாவட்ட தலைவர் அ.லட்சுமணன் , மாநில நிர்வாக குழு உறுப்பினர் கழுகு வீரா, சங்க செய்தி தொடர்பாளர் அருண் உள்ளிட்டோர் இருந்தனர்.

0
128

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here