Home மாவட்டம் குடிநீர் குழாயை சேதப்படுத்திய நான்கு பேர் மீது வழக்கு

குடிநீர் குழாயை சேதப்படுத்திய நான்கு பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி கே .எட்டிப்பட்டி கிராமத்தில் குடிநீர் பைப் லைன் சேதப்படுத்திய 4 நபர்கள் மீது சாமல்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியம் கே . எட்டிப்பட்டி ஊராட்சி கரடி கவுண்டனூர் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே 26.4.2026 அன்று தகராறு ஏற்பட்டு ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் பைப் லைன் சேதப்படுத்தியது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி உதவி இயக்குனர் ஊராட்சிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மேற்படி சம்பவ இடத்தினை பார்வையிட்டு சுமார் 200 குடும்பங்களுக்கு தண்ணீர் செல்லும் பைப் லைன் உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்க வழிவகை செய்துள்ளனர். மேலும் இளவரசன் என்பவர் தனது வீட்டிற்கு முறையற்ற குடிநீர் இணைப்பு எடுத்த காரணத்தினால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் அடிப்படையில் மேற்கண்ட குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கே. எட்டிப்பட்டி ஊராட்சி செயலாளர் திரு பி. சரவணன் அவர்கள் ஊத்தங்கரை வட்டம் சாமல்பட்டி காவல் நிலையத்தில் திரு .இளவரசன் திரு ஜெயவேல் திரு.அரசு திரு .ஜெய்சங்கர் ஆகியோர் குடிநீர் பைப் லைன்களை சேதப்படுத்தியது குறித்து இன்று 27.4.2026 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி சாமல்பட்டி காவல் நிலைய குற்ற எண் 48/2026 U/s 3(1)TNPPDL act என் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி உமா அவர்கள் தெரிவித்துள்ளார்

0

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version