back to top
14.1 C
London
Saturday, June 6, 2026
No menu items!
Homeஉலகம்உலகநாடுகள் நிம்மதி பெருமூச்சு : ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டுக் கப்பல்களுக்கு மட்டும் தடை...

உலகநாடுகள் நிம்மதி பெருமூச்சு : ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டுக் கப்பல்களுக்கு மட்டும் தடை –  ஈரான் புதிய அறிவிப்பு  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், இதன் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியுள்ளது. இந்த வழித்தடத்தில்தான், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு என்றளவில் நடைபெறுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில் அந்நாட்டுக் கப்பல்கள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை வழியே அனுமதி இல்லை என ஈரான் அறிவித்துள்ளது. மேலும், நீரிணை வழியே செல்வதற்கு மற்ற நாடுகளின் கப்பல்களுக்கு எந்தவித இடையூறும் இல்லை என்று தற்போது  ஈரான் கூறியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவித்த நிலையில், அவ்வழியாக வர்த்தகம் நாடுகள் தங்களின் போர்க் கப்பல்களை அனுப்பி அமெரிக்காவுக்கு உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உலக அளவில் எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், உலகம் முழுவதும் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா உட்பட ஹோர்முஸ் நீரிணையை வழியாக எண்ணெய் பெறும் அனைத்து நாடுகளும் தங்களின் போர்க்கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.அமெரிக்கா விடுத்த அழைப்பை சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் நிராகரித்துவிட்டன. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா, ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டுள்ளது.இதே போன்று, பிரான்ஸை சேர்ந்த 10 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

 இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் எண்ணெய் கிடங்குகள் மற்றும் துறைமுகங்கள் அருகே உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here