back to top
13.1 C
London
Saturday, June 6, 2026
No menu items!
Homeஉலகம்அமெரிக்க எஃப்-18 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியிட்ட ஈரான் - Kumudam

அமெரிக்க எஃப்-18 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியிட்ட ஈரான் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



கடந்த 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதற்க பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில் சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.

அதுமட்டுமின்றி இந்த போரின் காரணமாக கேஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உலக பொருளாதாரம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக  ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையிலான இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பல்வேறு நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. 

இதன் காரணமாக 5 நாட்கள் போர் நிறுத்தப்படுவதாக  மார்ச் 23 அன்று டிரம்ப் தற்காலிகமாக அறிவித்தார்.  ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது என்பதை உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட 15 முக்கிய அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை அமெரிக்க அரசு முன்மொழிந்தது. இருப்பினும், அமெரிக்க தாக்குதலுக்கு மீது ஈரான் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா உயர்திறன் கொண்ட ராணுவ விமானங்களில் ஒன்றான எஃப்-18 போர் விமானத்தை ஈரானின் புரட்சிக்கர காவல்படை தாக்கி அழித்ததாக ஈரானின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று விடியோ வெளியிட்டுள்ளது. இந்த விடியோ வேகமாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த விடியோ போலியானது என்று அமெரிக்க தலைமை ராணுவக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஈரானின் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி, சாபஹார் பகுதிக்கு மேலே பறந்த எஃப்-18 ரக போர் விமானம் தாக்கப்பட்டதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று குறிப்பிட்டுள்ளது.

 

மத்தியில் கடந்த வாரங்களில் அமெரிக்காவின் எஃப் 15 ரக போர் விமானம், எதிரிகளால் தாக்க முடியாத மின்னல் வேகத்தில் பயணிக்கக் கூடிய அமெரிக்க விமானப் படையின் அதிநவீன 5 ஆம் தலைமுறை போர் விமானமான எஃப் 35 லைட்னிங் 2 ரக போர் விமானம் உள்ளிட்டவைகளையும் தாக்கி அழித்த விடியோக்களையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here