back to top
20.6 C
London
Thursday, October 15, 2026
No menu items!
Homeசினிமா‘ஃப்ரேம் ஆஹ் பாருங்க ஜி’...ஜெயிலர் 2 எப்படி இருக்கு? ரஜினியின் மாஸ் வேற லெவல்..நெல்சன் என்ன...

‘ஃப்ரேம் ஆஹ் பாருங்க ஜி’…ஜெயிலர் 2 எப்படி இருக்கு? ரஜினியின் மாஸ் வேற லெவல்..நெல்சன் என்ன செய்திருக்கிறார்? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


சூப்பர் மார்கெட்டில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் ரஜினியை சிலை கடத்தும் வில்லன் கோஷ்டிகள் சீரியஸாக தேடுகின்றன. அதற்கு இரண்டு காரணங்கள்… முதல் பாகத்தில் வில்லனாக வந்த விநாயகனை ரஜினி கொன்றது… அடுத்தது அவரிடம் இருக்கும் மூன்று கன்டெய்னர்கள், அதில் இருக்கும் சாமி சிலைகள்… 

இந்த இரண்டிற்காகவும் வில்லன்கள் ரஜினியின் குடும்பம் முதல், அவரது நண்பர்கள் குடும்பம் வரை கடத்தி, டார்ச்சர் செய்ய பதிலுக்கு நண்பர்கள் உதவியுடன் ரஜினி அவர்களை என்ன செய்கிறார் என்பதுதான் படம். 

இடைவேளை வரை வில்லன் சூரஜ் வெஞ்சரமூடுவை சூப்பராக சமாளிக்கும் ரஜினி, அவர் இறந்த பின் எஸ்.ஜே சூர்யாவுக்கு தான் யார், தனக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை சொல்லாமல் உணரவைப்பது சூப்பர். தன்னை வீட்டிற்கு அழைத்து அவமானப்படுத்தும்  வித்யாபாலனை ரஜினி கெத்தாக டீல் பண்ணும் காட்சிகளில் தியேட்டரில் விசில் பறக்கிறது.  

ரஜினியின் நண்பர்களாக வந்து படத்தில் அங்கங்கே பட்டாசு கொளுத்தும் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன் அட்டகாசம். கிளைமேக்ஸில் ஹிருத்திக் ரோஷன் ஆறு அழகிகளுடன் வந்து அசால்டாக வில்லன் கும்பல் மொத்தத்தையும் போட்டுத் தள்ளுவது செம மாஸ்… 

நோரா ஃபதேஹியின் அயிட்டம் சாங் சூப்பர் கிளு கிளு… அவரின் கால் அசைவிற்கு ரசிகர்களின் கழுத்தசைகிறது…. பூர்ணாவின் டான்ஸ் ஃபுல் மீல்ஸ், தெறிக்க விடுகிறார்… யோகிபாபுவின் என்ட்ரிக்கு பிறகுதான் காட்சிகளில் சுவையும், மணமும் கூடுகிறது. அவரது இன்ட்ரோ சீனே அட்டகாசம். அவரும் நமோ நாரயணனும் பண்ணும் நக்கலும் நையாண்டியும் செம ஷார்ப். சூரஜுடன் நமோ செஸ் ஆடும் காட்சிகள் நெல்சன் பிராண்ட்…

ரம்யா கிருஷ்ணன், மிர்னா இயல்பாக நடித்திருக்கின்றனர். வித்யாபாலனுக்கு காட்சிகளில் டயலாக் இருக்கிறதோ இல்லையோ கையில் சிகரெட் மட்டும் புகைந்து கொண்டே இருக்கிறது… அவரின் அழகை ரஜினி ரசித்து பேசும் காட்சி ரசிகர்களுக்கு செம போதை… விஜய் சேதுபதி கடைசியாக ஒரே ஒரு ஷாட்டில் மட்டும் தலையை காட்டி ‘ஜெயிலர் 3’ கன்பார்ம் என கண் சிமிட்டுகிறார்… 

 ஆரம்பத்தில் நமோ நாராயணனின் டிரைவராக அடக்கி வாசிக்கும் ரஜினி, எப்பொழுது வேனின் சீட்டுக்கு கீழ் இருந்து மெகா சைஸ் மிஷின்கன்னை கையில் எடுக்கிறாரோ அந்த இடத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை படம் ஃபயர் தான். நிஜத்தில் தன்னை சீண்டியவர்களுக்கு கிளைமேக்ஸில் அவர் மாஸாக சொல்லும் பதில் ரஜினியிஸத்தின் உச்சகட்டம்…

படம் முழுக்க நெல்சனின் டச் பளிச் என தெரிந்தாலும், வில்லன் எந்த ஆணியும் புடுஙக போவதில்லை, ரஜினிதான் ஆப்புக்கு மேல் ஆப்பு வைக்கப் போகிறார் என்பது ரசிகர்களுக்கு முன்னரே தெரிந்து விடுவதால் அவர்கள் ரஜினியை ரசிக்கிறார்களே தவிர காட்சிகளை பெரிதாக  கண்டுகொள்ளவில்லை. 

அனிருத்தின் பின்னணி இசையில் வைப் இருக்கும் அளவிற்கு உணர்வுகள் இல்லை. பாடல்களுக்கு ரீல்ஸ் போடலாம் ரிலாக்ஸாக முணுமுணுக்க ஒன்றுமில்லை. ஒளிப்பதிவு, எடிட்டிங் கொஞ்சம் அவசர அடியாக தான் தெரிகிறது. நிறைய மிஸ் பிரேமிங்… 

லாஸ்ட் சீனில் மோகன்லால் காரில் போய், தப்பித்து போகும் எஸ்.ஜே சூர்யாவின் ஏரோபிளேனை டேக் ஆஃப் ஆகாமல் நிறுத்துவது எல்லாம் எம்.ஜி.ஆர். காலத்திலேயே பழசு…  கிளைமேக்ஸில் வித்யாபாலன் ரஜினியின் தியாகத்தை பற்றி ரம்யா கிருஷ்ணனுக்கு பிரசங்கம் பண்ணுவதெல்லாம் கருப்பு வெள்ளை காலத்து டெக்னிக்… இதற்கு பதில் ஜெயிலர் படத்தை  ரம்யா கிருஷ்ணன் ஓ.டி.டி.யில் பார்த்து ரஜினி பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்டார் என்றே சொல்லியிருக்கலாம்… இவை எல்லாவற்றையும் மறக்க வைத்து, மனதில் நிற்பது ரஜினி மட்டுமே…

ஜெயிலர் 2 – ரஜினியின் சூப்ப்ஃர் மேஜிக் 

3.5 ஸ்டார் (இளையரவி)



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here