back to top
12.9 C
London
Monday, October 5, 2026
No menu items!
Homeதமிழ்நாடுCM விஜய்யின் வெற்றிப் பயணத்துக்கு தடை கிடைக்குமா? இன்று HIGH - COURT விசாரணை !...

CM விஜய்யின் வெற்றிப் பயணத்துக்கு தடை கிடைக்குமா? இன்று HIGH – COURT விசாரணை ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (அக். 5) விசாரணைக்கு வருகிறது. இத்திட்டம் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறி, ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் என். கலாமணி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

‘விடியல் பயணம்’ முதல் ‘வெற்றிப் பயணம்’ வரை :

முந்தைய ஆட்சிக் காலத்தில் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அக்டோபர் 2 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய விரிவாக்கத்தின் மூலம், குறிப்பிட்ட வகை அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமின்றி பயணிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எந்த பேருந்துகளில் இலவச பயணம் ?

திட்டத்தின் விரிவாக்கத்தின்படி, ஏற்கனவே இலவசப் பயண வசதி வழங்கப்பட்டு வந்த சாதாரண நகரப் பேருந்துகளுடன், எக்ஸ்பிரஸ் (Express), எல்.எஸ்.எஸ்.(LSS), டீலக்ஸ்(Deulex) உள்ளிட்ட சில வகை பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் காரணமாக அரசுப் பேருந்துகளுக்கு பயணிகள் அதிகளவில் செல்லக்கூடும் என்றும், அதன் தாக்கம் தங்களது வருவாயில் பிரதிபலிக்கலாம் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கு :

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் என். கலாமணி, வெற்றிப் பயணத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

திட்டத்தின் காரணமாக தனியார் பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகவும், இதனால் பேருந்து உரிமையாளர்களுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, தனியார் பேருந்து தொழிலை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வழித்தடங்கள் தொடர்பான விவரம் :

மனுதாரருக்கு ஈரோடு முதல் வெள்ளித்திருப்பூர் வரையிலான சுமார் 47 கிலோமீட்டர் வழித்தடத்திலும், காக்கப்பாளையம் முதல் அந்தியூர் வரையிலான சுமார் 88 கிலோமீட்டர் வழித்தடத்திலும் பேருந்துகளை இயக்க அனுமதி இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், பேருந்து நிறுவனத்தில் சுமார் 15 ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரமும் இந்தப் பேருந்து தொழிலைச் சார்ந்திருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டுக்கு ரூ.6,000 கோடி செலவு எனக் கூறப்படும் விவரம் :

வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் பெண்கள் மேற்கொள்ளும் இலவசப் பயணத்துக்கான கட்டணச் செலவை அரசு ஏற்றுக்கொள்வதாகவும், இதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி செலவிடப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், அரசுப் பேருந்துகளில் வழங்கப்படும் இலவசப் பயணச் சலுகையைப் போன்று தனியார் பேருந்துகளையும் திட்டத்தில் இணைத்து, அதற்கான இழப்பீடு அல்லது மானியத்தை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை தொடர்பாகவும் கேள்வி :

வெற்றிப் பயணத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறை மற்றும் சட்ட அடிப்படை குறித்தும் மனுவில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

திட்டம் தொடர்பாக உரிய அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்றும், சட்டப்பூர்வ நடைமுறைகள் குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இடைக்காலத் தடை கோரிக்கை :

வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.

மேலும், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு மட்டும் கட்டணமின்றி பயணிக்கும் சலுகை வழங்கப்படுவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் சம உரிமைக்கு முரணானது என்ற வாதமும் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை :

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வு முன்பு இன்று (அக். 5) விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.

வழக்கின் விசாரணையின்போது, வெற்றிப் பயணத் திட்டத்தின் சட்டப்பூர்வ அம்சங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படும் பாதிப்பு உள்ளிட்ட மனுதாரரின் கோரிக்கைகள் குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here