back to top
13 C
London
Saturday, October 3, 2026
No menu items!
Homeஅரசியல்சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க.ஸ்டாலின்…..ஆப்பு வைத்த தவெக! - Kumudam

சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க.ஸ்டாலின்…..ஆப்பு வைத்த தவெக! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலையொட்டி, தாராபுரம் தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.2) பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது தவெக வேட்பாளர் சத்தியபாமாவை விமர்சித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், அவரை “பெட்டி பாமா”, “பல்டி பாமா” உள்ளிட்ட வார்த்தைகளால் விமர்சித்தார். மேலும், அவரது உருவத்தை குறிப்பிட்டு கேலி செய்யும் வகையிலும் இந்த உருவத்தை வைத்துக்கொண்டு எப்படி பல்டி அடித்தாரோ என்று பேசியதாக தவெகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு தவெக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண் வேட்பாளரை உருவ கேலி செய்து இழிவுபடுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறி, தவெக வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் ஆணையம், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிர்மல்குமார் கடும் கண்டனம்

இதனிடையே, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், மு.க.ஸ்டாலினின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பேசுவது என்றே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். பிரசார மேடையில் ஒரு பெண்ணைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுகிறார் என்பதிலேயே அவரது நிலைப்பாடு தெரிகிறது” என்றார்.

மேலும், “திமுகவினர் தரம் தாழ்ந்து வீதிகளில் பேசுபவர்களைப் போல ஆகிவிட்டனர். மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் தந்தையும் மகனுமாக மாறி மாறி தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர்” என்றும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், திமுகவின் அரசியல் எதிர்காலம் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “திமுகவின் அத்தியாயம் முடிவடைந்துவிட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதிமுக எந்த நிலையில் இருக்கிறதோ, அதே நிலைதான் திமுகவுக்கும் ஏற்படும்” என அவர் கூறினார்.

மேலும், “மு.க.ஸ்டாலினையோ, உதயநிதியையோ முன்னிறுத்தியோ, தங்களது சாதனைகளைக் கூறியோ திமுகவினரால் வாக்கு கேட்க முடியவில்லை. அதனால் வக்கிரத்தை காட்டி வாக்கு கேட்கின்றனர். இதுதான் அவர்களின் கடைசி ஆயுதம்” என்றும் குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், “இத்தனை ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு கொள்ளையடித்துள்ளனர்” எனவும் தெரிவித்தார். வரும் தேர்தல்களில் திமுக 100 சதவீதம் தோல்வியடையும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here