back to top
22 C
London
Friday, September 25, 2026
No menu items!
Homeஅரசியல்"பெண்கள் பாதுகாப்பில் NO COMPROMISE எங்கே? வண்டலூர் மாணவி விவகாரம்...உதயநிதி காட்டம்!" - Kumudam

“பெண்கள் பாதுகாப்பில் NO COMPROMISE எங்கே? வண்டலூர் மாணவி விவகாரம்…உதயநிதி காட்டம்!” – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்திலிருந்து பட்டப்பகலில் மாணவி ஒருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மற்றும் முதலமைச்சரின் பாதுகாப்புப் பொய்களை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர்  உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது, “சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே? சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் – அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் – பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி என்று பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகளை இந்த தவெக அரசு கண்டு கொள்ளாமல் அலட்சிய போக்கு காட்டி வரும் நிலையில் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கண்டத்தை தெரிவித்துள்ளார்.”

இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளது. அதில் “வண்டலூர் அருகே மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில் இதுவரை ஆதாரம் கிடைக்கவில்லை; குழந்தையின் நலன் கருதி சரி பார்க்கப்படாத தகவல்களை வெளியிட வேண்டாம்”. சிசிடிவி, பிற ஆதாரங்கள் கவனமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன; விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தாம்பரம் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here