back to top
23.1 C
London
Wednesday, September 23, 2026
No menu items!
Homeதமிழ்நாடுலீக்கான ரகசிய கடிதம் ! ஏர்போர்ட்டை தனியாருக்கு மாற்ற முயற்சித்தாரா விஜய் ? - Kumudam

லீக்கான ரகசிய கடிதம் ! ஏர்போர்ட்டை தனியாருக்கு மாற்ற முயற்சித்தாரா விஜய் ? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையமான (AAI) அமைப்பிடமிருந்து வேறு ஒரு திறமையான நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்டதாக கூறப்படும் இந்த கடிதம், ஒரு மாதத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர் கண்ணன் என்பவர் இந்த கடிதத்தை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.

சென்னை விமான நிலைய செயல்பாடு குறித்து கவலை :

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் விஜய், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து தனது கவலையை பதிவு செய்துள்ளார்.

இந்தியாவின் முக்கிய சர்வதேச விமான நுழைவாயில்களில் ஒன்றாகவும், தென்னிந்தியாவின் முக்கிய விமானப் போக்குவரத்து மையமாகவும் சென்னை விமான நிலையம் விளங்கி வந்தாலும், சர்வதேச தரத்திற்கேற்ற வகையில் அதன் செயல்பாடுகள் இல்லை என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை, விமான இயக்கம் மற்றும் சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சென்னை விமான நிலையம் எதிர்பார்த்த வளர்ச்சியை அடையவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்தில் பின்னடைவு :

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் சென்னை விமான நிலையம் பயணிகள் போக்குவரத்தில் பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற பெருநகர விமான நிலையங்கள் வேகமான வளர்ச்சியை பதிவு செய்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதாகவும், கொரோனா தொற்றுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

விமான நிலைய திறன் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை :

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு சுமார் 2.7 கோடி பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்த பின்னர் இந்த திறன் 3.5 கோடி பயணிகள் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், 2025-26 நிதியாண்டில் சென்னை விமான நிலையம் கையாண்ட பயணிகள் எண்ணிக்கை சுமார் 2.3 கோடி மட்டுமே எனவும், இதன் மூலம் விமான நிலையத்தின் முழு திறன் பயன்படுத்தப்படவில்லை என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சரக்கு போக்குவரத்திலும் போட்டி அதிகரிப்பு :

சென்னை விமான நிலையத்தின் சரக்கு போக்குவரத்து வளர்ச்சியும் போதுமான அளவில் இல்லை என முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற முக்கிய நகர விமான நிலையங்கள் சரக்கு சேவைகளை விரிவுபடுத்தி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தின் வளர்ச்சி குறைவாக இருப்பதாகவும், இதனால் தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான இயக்க திறனில் இடைவெளி :

சென்னை விமான நிலையம் ஒரு மணி நேரத்திற்கு அதிக எண்ணிக்கையிலான விமானங்களை கையாளும் திறன் கொண்டதாக இருந்தாலும், அந்த திறனுக்கு ஏற்ப விமான இயக்கங்கள் நடைபெறவில்லை என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கும், தற்போதைய பயன்பாட்டிற்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாகவும், இது விமான நிலையத்தின் செயல்திறனை பாதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் :

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில்,

* முனையங்களுக்கு செல்லும் வசதிகளில் உள்ள குறைபாடுகள்
* டாக்ஸி சேவைகளில் ஏற்படும் சிரமங்கள்
* போதுமான பார்க்கிங் வசதி இல்லாமை
* கழிப்பறைகள் மற்றும் பொதுப் பகுதிகளில் பராமரிப்பு குறைபாடு
* ஏசி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் ஏற்படும் கோளாறுகள்
* பயணப்பைகள் (லக்கேஜ்) கிடைப்பதில் தாமதம்
* பாதுகாப்பு சோதனை மற்றும் குடியுரிமை சோதனைகளில் நீண்ட நேர காத்திருப்பு

போன்ற பிரச்சனைகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச முனைய விரிவாக்கப் பணிகளில் தாமதம் :

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையம் தொடர்பான இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் விமான நிலையத்தின் நவீனமயமாக்கல் மற்றும் திறன் அதிகரிப்பு பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடையது :

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, ஆட்டோமொபைல் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறை, சுற்றுலா வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சென்னை விமான நிலையம் முக்கிய பங்காற்றுகிறது.

எனவே, சர்வதேச தரத்துடன் கூடிய திறமையான விமான நிலைய நிர்வாகம் தமிழகத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு உதவும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

AAI-யிடம் இருந்து வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரிக்கை :

இந்த அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இயக்கம், நிர்வாகம் மற்றும் எதிர்கால வளர்ச்சி பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடமிருந்து (AAI) மாற்றி, தகுதியான வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு விரைவாக பயன் அளிக்கும் வகையில், காலக்கெடு நிர்ணயித்து விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இதன் மூலம் சென்னை விமான நிலைய நிர்வாகம் தொடர்பான விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here