back to top
20.9 C
London
Friday, August 21, 2026
No menu items!
Homeஅரசியல்தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்....தட்டிச் சென்ற ஜோய் ஆலுக்காஸ்! - Kumudam

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்….தட்டிச் சென்ற ஜோய் ஆலுக்காஸ்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் முதலமைச்சர் விஜயின் மிக முக்கியமான நலத்திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் 22 கேரட் (BIS 916 ஹால்மார்க்)  தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற திட்டம் அனைவரும் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தொடங்க இருப்பதாகவும் இதற்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று  தவெக அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுத்தோறும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு இந்த தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகளை அதிகரிப்பதையும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் இந்த டெண்டரை நடத்தியது.

இதற்கான டெண்டர் கடந்த 19 ஆம் தேதி திறக்கப்பட்ட போது இதில் ஒரு கிராம் தங்கம் விலை இந்தியா புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் நிர்ணயம் செய்யும் விலையின் படி கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் மோதிரம் செய்வதற்கான செய்கூலி, பிஐஎஸ் ஹால் மார்க் கட்டணம், பேக்கிங் கட்டணம், காப்பீட்டுக் கட்டணம், போக்குவரத்துச் செலவு மற்றும் பிற தொடர்புடைய செலவுகளுக்கு தொகைக்கான டெண்டர் கோரப்பட்டது.

மேலும் செப் 17 ஆம் தேதி இத்திட்டம் தொடங்க உள்ள நிலையில்  ஒரு கிராம் எடை கொண்ட 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 மோதிரங்கள் கொள்முதல் செய்வதற்கு இந்த டெண்டர் விடப்பட்டது. இதனிடையே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான கொள்முதல் டெண்டரை முன்னணி நகைக்கடை நிறுவனமான  ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

இதன் மூலம் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் 0.01 ரூபாய்க்கு இந்த டெண்டரை பெற்று எல் 1 நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்திற்கு தங்க மோதிரம் சப்ளை செய்வதற்கான பணி ஆணை விரைவில் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த டெண்டரில் குறிப்பாக 11 முண்ணனி நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் தற்போது ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தட்டிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 

 

 

 

 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here