back to top
14.5 C
London
Friday, August 21, 2026
No menu items!
Homeசினிமா“தனுஷ் அந்த நேரத்துல முரட்டுத்தனமா இருப்பாரு..” - பிரியா பவானி சங்கர் ஓபன்..! - Kumudam

“தனுஷ் அந்த நேரத்துல முரட்டுத்தனமா இருப்பாரு..” – பிரியா பவானி சங்கர் ஓபன்..! – Kumudam

Date:

Related stories

"பைல் ஓபன் பண்ண ஜோசியம் பார்க்கணுமா? " – விஜய்க்கு உதய் கேள்வி!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று எரிசக்தித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை...

‘ஜனநாயகன்’ தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டிங்களா? ஓடிடியில் இப்போது பார்க்கலாம்…

முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான "ஜனநாயகன்" பல போராட்டங்களுக்கு பின்...

தேர்தலில் வாய்ப்பு: அமைச்சர் சொன்ன இயக்குனர் இவரா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர்...
spot_imgspot_img



செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ள பிரியா பவானி ஷங்கர், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது ஆரம்பகால அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தான் செய்தி வாசிப்பாளராக இருந்தபோது தனுஷை பேட்டி கண்டதாக தெரிவித்த பிரியா, அப்போது அவர் மிகவும் சோர்வாக இருந்ததாகவும், பேட்டியில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால், “தனுஷ் கொஞ்சம் ஆக்ரோஷமாகவும் முரட்டுத்தனமாகவும் இருக்கிறார்” என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பின்னர் தானும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி, தொடர்ந்து நடைபெறும் பட புரமோஷன்கள், ஒரே மாதிரியான கேள்விகளுடன் கூடிய பேட்டிகள் மற்றும் நீண்ட நேர பணிச்சுமை ஆகியவற்றை அனுபவித்தபோதுதான், ஒரு நடிகர் சில நேரங்களில் ஏன் சோர்வாகவோ ஆர்வமில்லாமலோ இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டதாக பிரியா தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு தனுஷை மீண்டும் சந்தித்தபோது, தனது பழைய எண்ணத்தையும் அவரிடம் நேரடியாக தெரிவித்ததாக கூறியுள்ளார்.

“அப்போது நீங்கள் உண்மையிலேயே முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறீர்கள் என்று நினைத்தேன்” என தனுஷிடம் தான் கூறியதாக பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

நடிகை ப்ரியா பவானி ஷங்கர் பகிர்ந்துகொண்ட இந்த சுவாரஸ்யமான பழைய நினைவு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here