back to top
25.4 C
London
Friday, August 7, 2026
No menu items!
Homeசினிமாஇன்னும் கேஸ் முடியலயா? Mutual Consent விவாகரத்துக்கு தயாராகிறார்களா விஜய் – சங்கீதா தம்பதி? -...

இன்னும் கேஸ் முடியலயா? Mutual Consent விவாகரத்துக்கு தயாராகிறார்களா விஜய் – சங்கீதா தம்பதி? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை இன்று (ஆகஸ்ட் 07) வாபஸ் பெற்றுள்ளார். இதையடுத்து, அந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

இன்றைய விசாரணையின்போது சங்கீதா நேரில் ஆஜராகாமல், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நீதிமன்றத்தில் பங்கேற்ற நிலையில், இனி இந்த விவாகரத்து வழக்கை தொடர விரும்பவில்லை என அவர் தெரிவித்த்தாகவும் இதனைத்தொடர்ந்து மனுவை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த மனுவை வாபஸ் பெறுவதில் முதலமைச்சர் விஜய் தரப்பு வழக்கறிஞர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. அதேவேளையில், எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால், புதிய விவாகரத்து மனுவை தாக்கல் செய்து கொள்ள சங்கீதாவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், தற்போதைய வழக்கு முடித்து வைக்கப்பட்டாலும், இதுவே விவாகரத்து விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி என்று கூற முடியாத நிலை உள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இருவரும் எதிர்காலத்தில் திருமண உறவைத் தொடர முடியாது என முடிவு செய்தால், மீண்டும் சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு இருவரும் ஒருமித்த முடிவுக்கு வந்தால், Mutual Consent Divorce எனப்படும் பரஸ்பர சம்மத விவாகரத்து முறையை தேர்வு செய்யலாம். இதில் கணவன், மனைவி இருவரும் இணைந்து விவாகரத்துக்கு விண்ணப்பிப்பார்கள். இருதரப்பினரின் சம்மதம் இருப்பதால், வழக்கமான போட்டி விவாகரத்து வழக்கைக் காட்டிலும் இந்த நடைமுறை ஒப்பீட்டளவில் எளிமையாக இருக்கலாம்.

எனவே, தற்போதைய மனு வாபஸ் பெறப்பட்டிருப்பது மட்டுமே வைத்து விஜய் – சங்கீதா தம்பதி அடுத்ததாக என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது. எதிர்காலத்தில் அவர்கள் எடுக்கும் சட்டரீதியான முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here