back to top
13.1 C
London
Friday, August 7, 2026
No menu items!
Homeஅரசியல்இனிக்க இனிக்க பேசி விவசாயிகளை ஏமாற்றிவிட்டனர்..... த.வெ.க. அரசை தாக்கிய எடப்பாடி! - Kumudam

இனிக்க இனிக்க பேசி விவசாயிகளை ஏமாற்றிவிட்டனர்….. த.வெ.க. அரசை தாக்கிய எடப்பாடி! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் முதல் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரியவில்சன். இதையடுத்து இன்று வேளாண் துறை அமைச்சர் வினோத் தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசியாதாவது, நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத்  “சுமார் இரண்டரை மணி நேர தவெக அரசின் வேளாண் பட்ஜெட் அறிவிப்பில் முக்கிய திட்டங்கள் எதுவுமில்லை.

தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக அரசின் வாக்குறுதிகள் குறித்து எந்த வொரு அறிவிப்பும் குறிப்பாக 100 சதவிகித பயிர்க்கடன் தள்ளுபடி, கரும்புக்கான ஆதார விலை ரூ. 4,500 ஆக உயர்த்துவது இப்படி எதுவும் வெளியாகவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

முந்தைய திமுக ஆட்சியைப் போல வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் நாடகம் போட்டிருக்கிறது தவெக அரசு. இனிக்க, இனிக்க பேசி விவசாயிகளை ஏமாற்றிவிட்டது தவெக அரசு. ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு கிடைக்கவில்லை. ஆனால், முதலமைச்சர் விஜய் இதுதொடர்பாக வாய் திறக்கவே மறுக்கிறார். குடிமராமத்து, தடுப்பணைகள் கட்டுவது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகவில்லை” என்றார்.

மேலும் சுமார் இரண்டரை மணிநேரம் வேளாண் பட்ஜெட்டில் எந்தவொரு புதிய திட்டமும் இல்லதாதது விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பழனிசாமி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நெல் குவிண்டாலுக்கு ரூ 3,500 என்ற வாக்குறுதி என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here