தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆர்வமுள்ள போட்டியாளர்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தனது அடுத்த பரபரப்பான அத்தியாயத்தில், சாதாரண மக்களுக்கும் தனது கதவுகளைத் திறக்கிறது.
விஜய் சேதுபதியின் அழைப்புடன் தொடங்கிய பிக் பாஸ் Common Man முயற்சிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து அமோக வரவேற்பு கிடைத்தது. மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழில்முனைவோர், பணியாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் கனவை நனவாக்க ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பிக் பாஸ் Common Man மூலம், முதல் முறையாக சாதாரண மக்களுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பிரபலங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த நிகழ்ச்சி, இப்போது அசாதாரண வாழ்க்கைக் கதைகளைக் கொண்ட சாதாரண மனிதர்களின் பயணத்தை முன்னிறுத்தும் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு விஜய் சேதுபதி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் தங்களது ஆளுமை மற்றும் வாழ்க்கைப் பயணத்தை வெளிப்படுத்தும் ஆடிஷன் வீடியோக்களை அனுப்பினர். அதனைத் தொடர்ந்து பல கட்டத் தேர்வுகள் மற்றும் நேர்முகப் பரிசோதனைகளின் மூலம் போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர்.தற்போது, பிக் பாஸ் வீட்டிற்குள் இடம்பிடிக்கும் இறுதி சிலரைக் கண்டறியும் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த பரபரப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இறுதி போட்டியாளர்களை தேர்வு செய்யும் முக்கிய நபர்களை அறிமுகப்படுத்தும் புதிய புரொமோவை ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளன. இந்த சிறப்பு தேர்வுப் பயணத்தில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன் மற்றும் ஓவியா நடுவர்களாக இணைந்துள்ளனர். ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற மாயா கிருஷ்ணன், இந்த ஆடிஷன் பயணத்தின் தொகுப்பாளராக இணைந்து, சாதாரண மக்களின் அசாதாரண பயணங்களை முன்னிறுத்தும் இந்த புதிய அத்தியாயத்திற்கு வழிகாட்டுகிறார்.
இந்த தேர்வுப் பயணத்தில் பங்கேற்பது குறித்து ஆரி அர்ஜுனன் கூறியதாவது, “பிக்பாஸ் என் வாழ்க்கையை மாற்றியது. இந்த சீசனில், உருவாக்கப்பட்ட பிம்பங்களையோ குறையற்ற ஆளுமைகளையோ அல்ல, உண்மைத்தன்மை, மன உறுதி, அச்சமின்மை மற்றும் தாங்கள் நம்பும் மதிப்புகளுக்காக நிற்கும் தைரியம் கொண்டவர்களையே தேடுகிறோம். பிக்பாஸ் வீட்டில் முகமூடிகள் நீண்ட காலம் நிலைக்காது; அழுத்தமான சூழலில் ஒருவரின் உண்மையான குணமே வெளிப்படும். புகழோ பிரபலமோ அல்ல, நேர்மை மற்றும் தன்னம்பிக்கையுடன் உண்மையாக இருப்பதற்கான துணிச்சல்தான் இறுதிவரை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட போட்டியாளர்களைத்தான் இந்த சீசனில் எதிர்பார்க்கிறோம்.”என்றார்.
ராஜு ஜெயமோகன்,”பிக் பாஸ் எனக்குக் கற்றுக்கொடுத்த மிகப்பெரிய பாடம், நாமாக இருப்பதே போதுமானது என்பதுதான். இந்த சீசன் எனக்கு மிகவும் உற்சாகமானது, ஏனெனில் நீண்ட காலமாக இப்படிப்பட்ட ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தவர்களை சந்திக்கிறோம். தங்களின் தனித்துவத்தால் பார்வையாளர்களை கவர்ந்து, மறக்க முடியாத பயணத்தை உருவாக்கும் போட்டியாளர்களைக் காண ஆவலாக இருக்கிறேன்,” என்றார்.
தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட ஓவியா, “பிக் பாஸ் எனக்கு ரசிகர்களுடன் ஒரு சிறப்பான பிணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதே வாய்ப்பு இப்போது சாதாரண மக்களுக்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயல்பாகவும் தன்னம்பிக்கையுடனும் தங்களாகவே இருப்பவர்களை பார்வையாளர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள். இந்த சீசனில் அப்படிப்பட்ட உண்மையான மனிதர்களையும், அவர்களின் சுவாரஸ்யமான வாழ்க்கைப் பயணங்களையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்,” என்றார்.
சீசன் 7-ல் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற போட்டியாளர்களில் ஒருவரான மாயா கிருஷ்ணன் , இந்த சிறப்பு ஆடிஷன் பயணத்தின் தொகுப்பாளராக இணைகிறார். முன்னாள் போட்டியாளர்களான ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன் மற்றும் ஓவியாவுடன் இணைந்து, சாதாரண மக்களின் அசாதாரண வாழ்க்கைப் பயணங்களை முன்னிறுத்தும் இந்த முக்கியமான புதிய அத்தியாயத்தை வழிநடத்துகிறார்.
இறுதிக்கட்டத் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் இடம்பிடிக்கப் போகும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிக் பாஸ் Common Man ஆகஸ்ட் 16 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் தினமும் ஸ்ட்ரீம் ஆகும். மேலும், ஸ்டார் விஜயில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.00 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகும்.
பிக் பாஸ் Common Man நிகழ்ச்சியை ஆகஸ்ட் 16 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் தினமும் காணத் தவறாதீர்கள். மேலும், ஸ்டார் விஜயில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.00 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகும்.





