back to top
17.9 C
London
Thursday, October 15, 2026
No menu items!
Homeஅரசியல்காவிரி நீர் பிரச்னையில் மௌனம் ஏன்? முதலமைச்சர் விஜயை நோக்கி எழும் கேள்விகள்! - Kumudam

காவிரி நீர் பிரச்னையில் மௌனம் ஏன்? முதலமைச்சர் விஜயை நோக்கி எழும் கேள்விகள்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



ஒரு விவசாய கிராமம் தண்ணீருக்காக படும் கஷ்டத்தை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதற்காக, தண்ணீர் குழாய்க்குள் இறங்கி போராடும் இளைஞராக ‘கத்தி’ படத்தில் நடித்திருப்பார் விஜய். ஆனால், இன்றோ மாநிலம் முழுவதும் அணைகள் வறண்டு விவசாயிகள் கண்ணீர்விடும் நிலையிலும், இதே நிலை தொடர்ந்தால், அடுத்தடுத்த மாதங்களில் மக்கள் குடிநீருக்கும் அல்லாட வேண்டியிருக்கும் என்கிற நிலையிலும், ஒரு சன்னமான குரல்கூட கொடுக்காமல் முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுந்திருக்கிறது!

இதுகுறித்து விவரம் அறிந்த அரசியல் ஆய்வாளர் ஒருவரிடம் பேசினோம். ‘காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் இன்றளவும் பிரச்னையாகவே தொடர்கிறது. காவிரி நீருக்காக கலவரம். உண்ணாவிரதம், விவசாயிகள் தற்கொலை, சட்டப்போராட்டம் என இதுவரை ஏகப்பட்ட களேபரங்கள் நடந்துள்ளன. காவிரி விவகாரத்தைப் பொறுத்தவரை, கடந்த காலங்களில் அதிமுக மற்றும் தி.மு.க அரசுகள் தொடர்ந்து குரல் கொடுத்திருக்கின்றன.

அதன் வழியாகவே காவிரி நடுவர் மன்றம் காவிரி மேலாண்மை வாரியம். ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதோடு, நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் பெறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இதில், நடுவர் மன்றத்தின் இறுகித் தீர்ப்பை அரசாணையில் வெளியிட வைத்தது முதல் உச்ச நீதின்றம் வரை போராடி நீதியை பெற்றது வரை ஜெயலலிதாவின் பங்களிப்பு முக்கியமானது. அதனால்தான், தமிழ்நாட்டுக்கு நதிநீர் பங்கீடு ஆண்டுதோறும் இருந்துவருகிறது. இதில் ஏதாவது சிக்கல் என்றால், கடந்த கால அரசுகள் காவிரி நடுவர் மன்றத்தில் முறையிடும்.

இந்நிலையில், ஏற்கெனவே மேகதாதுவில் புதிய அணையைக் கட்டியே தீர்வோம்’ என சங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் கர்நாடக அரசு, தண்ணீர் இருப்பு இல்லை’ என்று கூறி ஜூன். ஜூலை மாதத்திற்கு தமிழகத்துக்கு சேரவேண்டிய நீரை திறக்காமல் அலைக்கழித்துவருகிறது. அதாவது, சுமார் 42 டி.எம்.சி நீர் இதுவரை தமிழகத்துக்கு கிடைத்திருக்கவேண்டிய நிலையில், வெறும் 3 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.

இத்தனைக்கும் அங்கு த.வெ.சு.வின் நட்பு சக்தியான காங்கிரஸ் ஆளும்போதும், இதுகுறித்து முதல்வர் விஜய் இதுவரை வாயே திறக்கவில்லை. இதன்மூலம், கர்நாடகத்தைப் பகைத்துக்கொண்டால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கர்நாடக வசூல் பாதிக்கப்படும் என்று முதல்வர் விஜய், லாபக்கணக்கு பார்க்கிறாரா என்கிற கேள்வி எழுகிறது’ என்றார் ஆதங்கமாக தமிழ்நாடு காவிரி உழவர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமலநாதனிடம் பேசினோம் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை, பற்றாக்குறை காலங்களில் எப்படி பகிர்வு செய்துகொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் இதுவரை கர்நாடகா அரசையும், இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசையும் தமிழக அரசு எதுவும் கேட்காமல் இருப்பதுதான் எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி அளிக்கிறது. கர்நாடகா மட்டுமின்றி கேரளாவிலும் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

எங்கே அவர்களை எதிர்ப்பதுபோல் ஆகிவிடுமோ என்ற அச்சம் முதல்வர் விஜய்யிடம் இருப்பதாகத்தான் இதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. காவிரி தண்ணீர் கிடைக்காமல் போனால் வேளாண்மைக்கும் விவசாயிகளுக்கும் மட்டுமே பாதிப்பில்லை, நீர்நிலைகளில் வறட்சி அதிகரிக்கும். நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறையும்.

காவிரி கொள்ளிடத்தின் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நம்பியிருக்கின்ற 20 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஐந்து கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்துக்கே பேராபத்து ஏற்படும். அப்படியிருந்தும் இந்த அரசு மௌனமாக இருப்பதை என்னவென்று சொல்வது? இதுகுறித்த அனுபவம் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதை தாண்டி, எடுத்து சொல்லக்கூடவா யாரும் இல்லை? முதல்வரின் ஆலோசகர்கள் என்ன செய்கிறார்கள்? இந்நேரம் அனைத்துக் கட்சியினர். விவசாயிகள், ஓய்வுபெற்ற நீர்வளத்துறை அதிகார்களின் கூட்டங்களைக் கூட்டி ஆலோசனை கேட்டிருக்க வேண்டாமா? ஒரு குழு டெல்லிக்குச் சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டாமா?

அதேபோல, ஜூலை 22ம் தேதி நடைபெற்றது உட்பட அனைத்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசு கொடுத்த கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றால், அடுத்து என்ன செய்யவேண்டும் என சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்யாதபோது, திரைப்பட கணக்குத்தான் பின்னணி என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது. அதேபோல, அரசைத் நாண்டி தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காவிரி பிரச்னையை வலுவாக எதிரொலிக்க வேண்டும்’ என்றார்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அவீரப்பன், காவிரி நடுவர் மன்றம் மேலாண்மை வாரியம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இருந்தாலும் அவை எவற்றையும் கர்நாடகம் மதிப்பதில்லை. உச்ச நீதிமன்றமோ, நடுவர் மன்றமோ ஒரு தீர்ப்பு கொடுத்தால் அதை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும்தான் இருக்கிறது. ஒரு மாநில அரசு அதை செய்யாதபோது, மத்திய அரசுதான் செய்யவேண்டும். அப்படிதான் மத்திய அரசு அதைப்பற்றி வாயே திறப்பதில்லை.

இதுபோன்ற சூழலில் தமிழ்நாடு அரசு, கர்நாடகா அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடாமல், ‘நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாத கர்நாடகா அரசுமீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று மத்திய அரசுமீது வழக்குப் போட வேண்டும். மேலும் மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் கேட்கிறது தமிழக அரசு. அது நமக்கு கிடைக்கும் நீரின் அளவு குறையவே வழிவகுக்கும். சொல்லப் போனால், இது நம் கழுத்தில் நாமே தூக்குக்கயிறு மாட்டிக்கொள்வது போன்றது’ என்றார்.

இதுகுறித்த கருத்துகளை அறிய நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்தையும் அவரின் உதவியாளர்களையும் தொடர்புகொண்டோம். ஆனால் அமைச்சரிடம் பேச முடியவில்லை. காவிரி ரிலீஸுக்கும் நாள் குறிங்க முதல்வரே!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here