back to top
18.9 C
London
Saturday, August 1, 2026
No menu items!
Homeஅரசியல்கரூர் கூட்டத்தில் விஜய் விமர்சனம்... தூத்துக்குடியில் கனிமொழி கடும் பதில்! - Kumudam

கரூர் கூட்டத்தில் விஜய் விமர்சனம்… தூத்துக்குடியில் கனிமொழி கடும் பதில்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


இன்று நடைபெற்ற கரூர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் திமுக கட்சியை மிகவும் கடுமையாக விமர்சித்திருந்த முதலமைச்சர் விஜய்க்கு தக்க பதிலடியாக தூத்துக்குடியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத்  தலைவருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்த போது,  தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் எந்த இடத்திற்கு போகக்கூடாதோ அந்த இடத்திற்கே சென்று அங்கிருக்கக் கூடிய மக்களுக்கு சிக்கலை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஏற்கனவே தேர்தல் பரப்புரைக்காக சென்று தான் 41 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் அங்கு சென்றிருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்கு சென்று அங்கே இருக்கக்கூடிய குழந்தைகளின் மனநிலையை பாதிக்கக்கூடிய அளவிற்கும் இந்த ஆட்சியில் நடந்து கொள்கிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி முதலமைச்சரும் அதனை செய்யும் போது இந்த ஆட்சி எதை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது.முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரையும் அனைவரும் தங்களுக்கென்று தனிதனிப் பொறுப்புகள் இருக்கின்றதை மறந்து விடகூடாது. நான் கரூர் துயரம் பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை ஏனென்றால் இது போன்ற துயர சம்பவம் குறித்து பேசுவதை நான் பொறுப்புணர்வுடன் தவிர்ப்பதே நல்லது என்று நினைக்கின்றேன்.

ஏனெனில் விசாரணை நடந்து கொண்டிருக்கின்ற விஷயம் அதனால் அதனை குறித்து பேச வேண்டாம் என்ற பொறுப்புணர்வு எனக்கு இருப்பதனால் கரூர் துயர சம்பவம் பற்றி நான் பேசாமல் தவிர்ப்பதுதான் சரியாக  இருக்கும். ஆனால் கரூர் துயரத்தின் போது மக்களோடு நின்றவர்கள் யார்? அவர்களுக்கு உதவி செய்தவர்கள் யார்?  சம்பவம் நடந்த உடனே அங்கிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கிருந்து ஓடிப்போனவர்கள் யார் ? என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று கூறியுள்ளார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here