back to top
24.7 C
London
Sunday, July 5, 2026
No menu items!
Homeஅரசியல்பிப் 17-ம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு  - Kumudam

பிப் 17-ம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு  – Kumudam

Date:

Related stories

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து- முதலமைச்சர் அதிரடி உத்தரவு

மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து...

மருத்துவர் மீது இப்படிதான் தாக்குதல் நடந்துள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

விக்னேஷ் ஏற்கனவே இந்த மருத்துவமனையில் உதவியாளராக இருந்ததால், எப்போதும் போல...
spot_imgspot_img



தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஆண்டிற்கான முழுமையாக பட்ஜெட்டை தற்போதைய திமுக அரசால் தாக்கல் செய்யப்பட முடியாது. இதனால் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். 

இதுகுறித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறு கூட்ட அரங்கில் பேரவைதலைவர் மு. அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:மதமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26(1)-ன் கீழ் தமிழ்நாடு சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத்தை பிப்ரவரி 17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளேன்.

இதில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை காலை 9.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவைக்கு அளிப்பார். மேலும் வருகிற 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 193(1)-ன் கீழ் 2026-27 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கைகளும், பேரவை விதி 189(1)-ன் கீழ் 2025-26 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் (இறுதி) பேரவைக்கு அளிக்கப்படும்.

இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதைச் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் அதாவது 16-ம் தேதி அலுவல் ஆய்வுக் குழு தலைமையில் கூட்டப்பட்டு முடிவு செய்யப்படும்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை சட்டப்பேரவை கூடிய நாள் முதல் என்ன பேசினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை உலகெங்கிலும் இருந்து பார்த்துத் தெரிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சிறப்புத் தீர்மானங்கள் மானிய கோரிக்கைகள் அனைத்தும் நேரலை செய்யப்பட்டு வருகிறது. கூட்டத்தொடர் முழுவதையும் நேரலை செய்ய வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணமாக இருக்கிறது. கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தையும் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here