back to top
19.5 C
London
Sunday, July 5, 2026
No menu items!
Homeதமிழ்நாடுதமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி- விஜய் கண்டனம் - Kumudam

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி- விஜய் கண்டனம் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜி  இன்று பெங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இச்சம்பவம் தொடர்பாக விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள் சங்கள் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் மருத்துவர் மீதான கத்திக்குத்து சம்பவத்திற்கு தவெக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,  “தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜி  இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here