back to top
16.5 C
London
Thursday, July 2, 2026
No menu items!
Homeஅரசியல்சட்டப்பேரவை அனுபவங்கள்: முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பகிர்வு - Kumudam

சட்டப்பேரவை அனுபவங்கள்: முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பகிர்வு – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



புதிதாகத் தேர்வு பெற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு இரு நாள் சிறப்புப் புத்தாக்கப் பயிற்சி முகாமிற்கு அழைப்பு விடுத்திருந்தார், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், கடந்த வாரம் இந்தப் பயிற்சி முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க, தி.மு.க, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் (சங்கராபுரம் ராகேஷ் தவிர) புறக்கணித்தனர்.

தொடக்க நிகழ்வில், சட்டப் பேரவையில் நடந்த இரு நிகழ்வுகள், ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட அனுபவத்தை விளக்கிப் பேசினார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இதனைத் தொடர்ந்து, இரு நாட்கள் நடந்த பயிற்சி முகாமில் சட்டப்பேரவை விதிகள், செயல்பாடு, விவாதம் செய்யும் முறை, தவிர்க்க வேண்டியவை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. அடுத்து வரும் நாட்களில் நடக்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இந்தப் பயிற்சிக்குப் பலன் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஆகியோரின் இதனிடையே, முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவையில் இடம்பெற்ற மூத்த சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், தனது பேரவை அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார். இன்னும் இரு சீனியர்கள் அடுத்தடுத்து..

கலைஞரை எதிர்கொள்ள முடியாது!

பீட்டர் அல்போன்ஸ்

கலைஞர் கருணாநிதியுடன் சட்டமன்றத்தில் இருந்த அனுபவம் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த அனுபவம் போன்றது. அவர் சபாநாயகர் வருவதற்கு முன்பே அவைக்கு வந்துவிடுவார். யார் பேசுகிறார்கள், யாருக்கு நேரம் வழங்க வேண்டும் என்பதைக் கவனிப்பார். சில சமயங்களில் தி.மு.க. உறுப்பினர்களின் நேரத்தைக் குறைத்து எங்களுக்குப் பேசுவதற்கான கூடுதல் நேரம் வழங்கச் சொல்வார்.

கலைஞர் மிகவும் அரிதாகவே அவையிலிருந்து வெளியே செல்வார். வெளியே சென்றாலும், உள்ளே என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார். கேள்விகளுக்கு அமைச்சர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்றால், தானே பதிலளிக்கத் தொடங்குவார். ஏனெனில், அவர் கேள்வி நேரத்திற்கான கேள்விகளையும் முன்கூட்டியே படித்துவிட்டு வருவார். எனவே, அவரை விவாதத்தில் எதிர் கொள்வதற்கு மிகுந்த தயாரிப்பு அவசியம்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், தனது முதல் உரையிலேயே என்னையும் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்தையும் பாராட்டினார். புதிய உறுப்பினர் கள் எங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும், நாங்கள் எவ்வாறு தயாராகி வருகிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால், அதன் பின்னர் அரசுக்கு ஆலோசனைகள் வழங்க முயன்றபோது, எங்களுக்கு எந்த ஆலோசனையும் தேவை யில்லை; எல்லா ஆலோசனைகளும் எங்களிடமே இருக் கின்றன என்று எங்களுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எங்களைச் சட்டசபைக்குள்ளேயே பூட்டிவைத்த சம்பவமும் நடந்தது. பின்னர் ஆளுநர் தலையிட்ட பிறகே, நிலைமை சீரானது. 1991-96 வரையிலான ஐந்து ஆண்டுகளும் தொடர்ந்து போராட்டங்களே நடைபெற்றன. ஜெயலலிதா அவையில் இருக் கும்போது அமைச்சர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். அவரை நேராகப் பார்ப்பதற்குக் கூடத் தயங்குவார்கள். அவர் வெளியேறிய பிறகுதான் சுதந்திரமாகப் பேசுவார்கள். அந்த அளவிற்கு அவையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருந்தது!

இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல..!

சி.பி.எம். மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.பாலபாரதி 

தமிழ்நாடு சட்டப் பேரவையில் பெண் எம்.எல்.ஏக்கள் கண்ணியமாக நடத்தப்படுகிறார்கள். அந்தக் கண்ணியம் மேலும் தொடர வேண்டும் சட்ட மன்றத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகை யிலான பழமொழிகள் அல்லது பழைமைவாதக் கருத்துகள் கூறப்பட்டால், அதற்குப் பெண் உறுப்பினர்களும், பெண்ணுரிமையில் நம்பிக்கை கொண்ட ஆண் உறுப்பினர்களும் ஆட்சேபனை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

இதற்கு உதாரணமாக, 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஓர் அமைச்சர், ‘பொம்பள சிரிச்சா போச்சு, புகையிலை விரிச்சா போச்சு’ என்ற பழமொழியைக் கூறியபோது, தோழர் பாப்பா உமாநாத் உடனடியாக எழுந்து, “அப்படிப்பட்ட அதிசயமான புகையிலை எங்கே இருக்கிறது என்று காட்டுங்கள்: ஆண்கள் சிரித்தால் என்ன ஆகிறது? என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.

அதன் நியாயத்தை உணர்ந்தாலும், சபை சிரிப்பிலும் ஆழ்ந்தது. இப்படி, பெண் களை இழிவுபடுத்தும் கருத்துகள் எதுவாக இருந்தாலும், உடனடியாக அது எதிர்க்கப்பட வேண்டும். பெண்களை அவமதிக்கும் வார்த்தைகள் அனைத்தும் ‘அன்பார்லிமென்ட் டரி வார்த்தைகளின் பட்டிய லில் சேர்க்கப்பட வேண்டும்.
சட்டமன்றத்தில் பணியாற்றிய காலத்தில் எனக்கு மறக்க முடியாத சில அனுபவங்கள் உள்ளன. மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ஆண் மீனவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட காலத்தில், பெண்களும் மீன்பிடித் தொழிலுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள்; அவர்கள் மீன்களை விற்பனை செய்வதும், பதப்படுத்துவதும் செய்கிறார்கள் என்பதால், அவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

அதனை ஏற்று அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், பெண்கள் விரும்பினால் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கப் பயிற்சி பெறும் வகையில் குமரி மாவட்டத்தில் பயிற்சி மையமும் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றம் கூடும் நாட்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் ஆண்டுக்கு 70 நாட்கள் வரை சட்டமன்றம் கூடியுள்ளது. தற்போது நடைமுறையில் பெண்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், பெண்கள் விரும்பினால் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கப் பயிற்சி பெறும் வகையில் குமரி மாவட்டத்தில் பயிற்சி மையமும் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றம் கூடும் நாட்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் ஆண்டுக்கு 70 நாட்கள் வரை சட்டமன்றம் கூடியுள்ளது. தற்போது நடைமுறையில் நடைபெறும் நாட்கள் 35 முதல் 45 நாட்களுக்குள் மட்டுமே உள்ளன. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. குறைந்தபட்சம் ஆண்டுக்கு 60 நாட்களாவது சட்டமன்றம் கூட வேண்டும். இதற்கான முடிவை அலுவல் ஆய்வுக் குழுவும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்து எடுக்க வேண்டும்.
சட்டையைக் கிழித்து, கையை முறுக்கினர்…

முன்னாள் சபாநாயகர்

தனபால்

அ.தி.மு.க. சார்பில் 1977-ம் ஆண்டு தொடங்கி ஆறு முறை சட்டப்பேரவைக்குத் தேர்வு பெற்றவர் என்ற பெருமையோடு, 2012 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை அலங்கரித்த பெருமைக்குரியவர் ப.தனபால். தற்போது அதிமு.க-வில் இருந்து விலகியுள்ள தனபாலின் மகன், லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெக அமைச்சரவையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர். சட்டப் பேரவை சபாநாயகராகப் பதவி வகித்த தனபால் தனது அனுபவங்களை இங்கே பகிர்கிறார்.

“சபையின் நடவடிக்கைகள் சபாநாயகரின் கட்டுப்பாட்டில் இருக்கும். முதலமைச்சர்கூட சபாநாயகரின் அனுமதி பெற்றே பேச முடியும். உதாரணமாக முதல்வர் சபையில் ஓர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றாலும், முன்கூட்டியே சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும். 110-வது விதியின் கீழ் அறிக்கை தாக்கல் செய்வதற்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.

சபையில் முதலமைச்சர் பேச எழுந்தால், அவர் என்ன பேசுகிறார் என்பதைக் கவனமாகக் கேட்க வேண்டும். கருத்து வேறுபாடு இருந்தால், முதல் வரிசையில் இருக்கும் தலைவர்கள் அதை எழுப்பலாம். அதற்கும் சபாநாயகர் அனுமதி அவசியம். அனுமதி கிடைக்கவில்லை என்றால் பேசக்கூடாது. ‘அம்மா’ முதல்வ ராக இருந்த காலத்தில் நடைபெற்ற விவாதங்கள் மனதில் பசுமையாக உள்ளன. அவருடைய உரைகள் கணீரென்று இருக்கும். எதிர்க்கட்சிகள் பேச முடியாத அளவுக்கு அவர் பதில் சொல்வார். அதை ரசித்த அனுபவம் இன்னும் நினைவில் உள்ளது.

முன்னாள் முதல்வர் இ.பி.எஸ். அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தொடர்பாக ஒரு முறை சபையில் மிகுந்த அமளி ஏற்பட்டது. சபாநாயகராக அதைப் பொறுமையுடன் சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தேவையான நடவடிக்கைகளை எடுத்து, அந்தத் தீர்மானம் விவாதிக்கப் பட்டு நிறைவேற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அந்த நேரத்தில் சிலர் என் சட்டையைக் கிழித்தனர்; கையை முறுக்கினர். எனது இருக்கையில் அமர்ந்து கூச்சலிட்டனர். இவை அனைத்தையும் நான் பொறுமையாகச் சகித்துக் கொண்டேன். அவ்வாறு நடந்துகொண்டவர் களுக்கு அவை உரிமைக் குழு மூலம் தண்டனை வழங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், அதையும் எனக்கு முன்னோடிகள் கற்பித்த பெருந்தன்மையுடன் அணுகி, அவர்களுக்குத் தண்டனை கொடுக்காமல் மன்னித்து விட்டேன்!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here